அதானியின் திட்டம் இந்திய அரசின் திட்டமாக மாற்றம்

இலங்கையின் வடபகுதியான மன்னாரில் இந்திய முதலீட்டாளர் கௌதம் அதானி குழுவினரால் மேற்கொள்ளப்படும் 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிசக்தி திட்டத்தை இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் திட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த ஜுலை மாதம் இலங்கை அதிபர் புதுடில்லி சென்றபோது இரு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அது தொடர்பான விபரங்களை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

500 மெகாவற் மின் உற்பத்திக்கான இந்த திட்டம் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதனிடையே, தமிழர் பகுதிகயில் இடம்பெறும் இந்த திட்டங்கள் குறித்து தமிழ் மக்களின் அனுமதியை இரு நாடுகளும் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டுக்குள் எழுந்துள்ளதுடன், பலவந்தமாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பதற்கு எதிராகவும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.