அமெரிக்காவின் புதிய துாதுவரை அனுமதிக்க வேண்டாம் – உதய கம்மன்பில போா்க்கொடி

udaya அமெரிக்காவின் புதிய துாதுவரை அனுமதிக்க வேண்டாம் - உதய கம்மன்பில போா்க்கொடிஇலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோர்ஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், 2024 மே 9 ஆம் திகதி அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு எழுப்பிய கேள்விகளுக்கு எலிசபெத் ஹோர்ஸ்ட் அளித்த பதில்கள், இலங்கை நாட்டின் நிலைமையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செனட் குழு உறுப்பினர்களின் விசாரணைகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துதல், இராஜதந்திர உறவுகளைப் பேணுதல், நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை, வெளிநாட்டுக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான விடயங்கள் உட்பட அரசாங்கத்துடன் புதிய கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பில் திருமதி எலிசபெத் ஹோர்ஸ்ட் செனட் குழுவின் முன் பல கருத்துக்களை வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவின் விருப்பத்தினாலேயே இலங்கைக்கான ஆய்வுக் கப்பல்களின் வருகை ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.