அமெரிக்கா தடை செய்த ஜெனரலுக்கு இந்தியாவில் வரவேற்பு

இலங்கை படையினரின் பிரதானியான ஜெனரல் சவீந்திர சில்வா இந்தியாவில் இடம்பெறும் இராணுவக் கல்லூhரியின் பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்திய இராணுவத்தின் மேற்கு பிராந்திய கட்டளைத்தளபதி லெப். ஜெனரல் மனோஜ்குமார் கட்டிவர் மற்றும் லெப். ஜெனரல் விஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் வரவேற்றதுடன், படைத்துறை மரியாதையும் வழங்கப்பட்டது.

shavendra india military 6 அமெரிக்கா தடை செய்த ஜெனரலுக்கு இந்தியாவில் வரவேற்புஇலங்கையில் இடம்பெற்ற போரில் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும், மோசமான மனித உரிமைகள் மீறல்களை மேற்கொண்டதிலும் சில்வாவுக்கு அதிக பங்கு இருப்பதாக தெரிவித்து 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா அவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத்ததை விதித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேசயம், அவரை தடைசெய்யுமாறு பிரித்தானியா அரசை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கேட்டுவருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.