அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?

அமெரிக்காவின் நிதியுதவியுடன், இந்திய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தனியார் குழுமம் ஒன்றினால், பகுதியாக முன்னெடுக்கப்படும் துறைமுகம் தொடர்பான ஒரு திட்டம், இந்து பசிபிக் பிராந்தியத்தில், தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு, முன்னெடுக்கப்படும் முற்றிலும் ஒரு புதுவகையான கூட்டிணைப்பைக் கட்டியம் கூறுவதாக அமைகிறது.

துறைமுகங்கள் கட்டுவதிலிருந்து, உணவுக்கான எண்ணெய் என்பவற்றைத் தயாரிக்கின்ற செயற்பாடு வரை, இந்தியாவைச் சேர்ந்த செல்வந்தரான கௌதம் அதானியால் (Gautam Adani) நெறிப்படுத்தப்படுகின்ற அதானி குழுமம் (Adani Group), இலங்கையின் தலைநகரத்தில் அமைந்திருக்கின்ற, கொழும்பு மேற்கு பன்னாட்டு முனையத் திட்டத்தை (Colombo West International Terminal Project) முன்னெடுத்துவருவதுடன், குறிப்பிட்ட திட்டத்தில் 51 வீதமான பங்குகளைக் கொண்டிருப்பதோடு, 500 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட அமெரிக்க நிதி ஆதரவுத் தளத்தையும் கொண்டிருக்கிறது. ஜோண் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் (John Keells Holdings, இலங்கை அரசினால் நிர்வகிக்கப்படுகின்ற துறைமுக அதிகார சபையும் (Sri Lanka’s Port Authority) திட்டத்தின் ஏனைய பங்குகளைக் கொண்டிருக்கின்றன.

122714429 colomboportcity அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்தியாவும் அமெரிக்காவும் குவாட் இராஜீக வலையமைப்பை (Quaddiplomatic network) உருவாக்கியிருப்பதுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு, சீன உட்கமைப்புத் திட்டங்களுக்கான ஒரு மாற்றீட்டை வழங்குவதில், தாம் குறியாக இருப்பதாக மேற்படி நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அரச மற்றும் தனியார் கூட்டிணைவைப் பிரதிபலிக்கின்ற இந்தப் புதிய துறைமுக முனையத் திட்டம், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் முதலாவது திட்டமாகப் போற்றப்படுகின்றது.

“சீனாவின் மேலும், அனைத்துத் துறைகளுக்கும் ஊடுருவுகின்ற அதன் வர்த்தகம் மற்றும் இராணுவப் பாதைகளிலும் தங்கியிருக்கின்ற சிறிய நாடுகளைப் பாதுகாப்பதில், குவாட் அமைப்பு திடசங்கற்பம் பூண்டிருப்பதை, இந்த நகர்வு சுட்டிக்காட்டுகின்றது” என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். துறைமுகத்தின் இன்னொரு முனையம், சைனா மேச்சண்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் கோ லிமிட்டெட்  (China Merchants Port Holdings Co Ltd.) என்றழைக்கப்படும் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

“அமெரிக்க நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இக்குறிப்பிட்ட திட்டத்தை வெறும் வர்த்தக முயற்சி என்று பார்ப்பது விவேகமான விடயம் அல்ல” என்று சிங்கப்பூரில் அமைந்திருக்கின்ற எசெக் ஆசிய-பசிபிக் வர்த்தகக் கல்லூரியில் (ESSEC Business School Asia-Pacific)  புவிசார் அரசியல் பேராசிரியராகப் பணிபுரிகின்ற செடோமீர் நெஸ்ற்றோவிச் (Cedomir Nestrovic) கருத்துத் தெரிவித்தார்.

India ID அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?“அமெரிக்க கூட்டாட்சி அரசின் ஒரு நிறுவனமான அமெரிக்கப் பன்னாட்டு நிதி நிறுவனம் குறிப்பிட்ட திட்டத்திற்குத் தேவையான ஐந்தில் நான்கு பகுதியான நிதியாகிய, 553 மில்லியன் டொலர்களை இத்திட்டத்திற்கு வழங்குவதிலிருந்தே குறிப்பிட்ட திட்டத்தின் புவிசார் அரசியல் தன்மை புலப்படுகின்றது” என்று அவர் மேலும் கூறினார்.

நிறுவன ரீதியாக இவ்வளவு பெரிய நிதித்தொகையை இவ்வாறான திட்டங்களில் அமெரிக்கா செலவிடுவது மிகவும் அரிதானதாகும் என்று நெஸ்றோவிச் சொன்னார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகின்ற போட்டித்தன்மையே இவ்வாறான ஒரு அரசியல் ரீதியிலான நோக்கத்துக்குக் காரணமாகும்.

விடயங்கள் வழமைபோல இருக்கின்றன எனப் பார்க்க முடியாது

தென் கொரியாவிலும் ஜப்பானிலும் இராணுவத்துருப்புகளை நிறுத்துவதன் முலம், சீனாவைக் கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா எடுத்து வருகின்ற முயற்சி, விரிவான குவாட் அமைப்பின் மூலம் தற்போது பொருண்மிய தளத்துக்கும் பரவலாக்கப்பட்டு, சீன முதலீடுகளைக் குறிபார்க்கத் தொடங்கியிருக்கிறது என்று நெஸ்றோவிச் விளக்கினார்.

சிறிய நாடுகளுக்கு உட்கட்டமைப்பு ரீதியிலான முதலீடுகளைப் பொறுத்தவரையில், பேஜிங் (Bejing) சம்பந்தப்படாத மாற்றீடுகளை எவ்வாறு வழங்கி;, சிறிய நாடுகளுக்கு ‘நீங்கள் தனியே இல்லை’ என்ற செய்தியைச் சொல்வதோடு மட்டும் நிறுத்தாது, சீனா மீது ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தை எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதே இந்த துறைமுக முதலீட்டுக்கான நோக்கமாக இருக்க முடியும். இவ்வாறு கூட்டுச் சேர்ந்து துறைமுக முனையத்தைக் கட்டியெழுப்பும் மாதிரி வெற்றியடையுமாக இருந்தால், இதே நடைமுறையை குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஏனைய நாடுகளிலும் அமெரிக்கா அறிமுகப்படுத்தக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

“தனியே சிறீலங்காவில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முதலீட்டாக இதனைக் கருத முடியாது. ஒரு பாரிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாகவே இவ்விடயம் பார்க்கப்பட வேண்டும்” என்று நெஸ்றோவிச் தொடர்ந்து கூறினார்.

china defends military ships planned visit to indias neighbour sri lanka அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?சிறிலங்காவிலும் பரந்த இந்துமாகடலிலும், விசேடமாக இந்த முக்கிய கப்பல் பாதையிலும்,  தமது செல்வாக்கைச் செலுத்துவதற்கு, கடந்த பல வருடங்களாகவே பேஜிங்கும் புது டெல்லியும் போட்டி போட்டுச் செயற்பட்டு வந்திருக்கின்றன. தனது நாட்டின் தென்பகுதியிலுள்ள பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு கடல் பாதைகள் மிகவும் முக்கியமானவை என்பதை இந்தியா மிகவும் நன்கு உணர்ந்திருக்கின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைகளில் மோதல்கள் நடைபெற்றிருக்கும் பின்னணியில், இந்தக் கடல் பாதைகள், மோதல் பிரதேசங்களாக மாறக்கூடிய ஆபத்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

உல்லாசப் பயணத்துறையில் அதிகமாகத் தங்கியிருந்த சிறீலங்காவின் பொருண்மியம் கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் முற்றாகச் சரிவடைந்த பின்புலத்தில், அந்த நாடு தன்னை அழுத்திய கடன் சுமையிலிருந்து மீளுவதற்கு, பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தது. அவ்வாறான ஒரு சூழலில், 4 பில்லியன் டொலர்கள் நிதியுதவியையும் மனிதாய உதவிகளையும் சிறீலங்காவுக்கு இந்தியா வழங்கியிருந்தது.

அவ்வாறான நிதியுதவியைத் தொடர்ந்து, சிறீலங்காவில் மிகப் பெரிய நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ளுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்கள், மற்றும் சிறீலங்காவின் வடகிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள திரிகோணமலைத் துறைமுகத்தை ஒரு பாரிய துறைமுகமாக மாற்றும் திட்டங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆழங்குறைந்த துறைமுகங்களில், தற்போது தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற சிறிய கப்பல்கள், தமது சரக்குகளை உலக சந்தைக்கு எடுத்துச்செல்ல, கொழும்புத் துறைமுகத்தில் உருவாக்கப்படுகின்ற புதிய முனையம் உதவும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகின்றது.

வர்த்தகத்துக்கான மிக முக்கிய கடல் பாதை


இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், முதல் தடவையாக சரக்குப் பரிமாற்றத் துறைமுகம் ஒன்றை, அதானி குழுமம் தற்போது கட்டமைத்து வருகிறது. அடுத்த வருடத்தின் இறுதியில், இத்துறைமுகம் செயற்பாட்டு நிலைக்கு வரும் என நம்பப்படுகிறது. கடல் வர்த்தகத்தின் பெரும் பகுதி சீனாவின் ஆதிக்கத்தில் தற்போது இருக்கும் பின்புலத்தில், இந்த வர்த்தகத்தின் கணிசமான பகுதியை தனதாக்க இந்தியா இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சிறீலங்காவில் ஏற்கனவே ஒரு முனையத்தை சீனா ஏற்கனவே நிர்வகித்து வருகிறது. அதானி குழுமம் இவ்வாறான ஒரு முயற்சி எடுக்காத சூழலில், சேவைகளுக்கான விலைகளைக் குறைப்பதன் மூலம் இந்தியாவிடமிருந்து சரக்குகளை தம்பால் சீனா கவர்ந்திழுத்திருக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய கப்பல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசியாவில் மேலும் பல சரக்குப் பரிமாற்றத் துறைமுகங்களை அதானி குழுமம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

China spy ship Yuan Wang 5 அமெரிக்க நிதியில் கொழும்பில் இந்தியாவின் துறைமுக முனையத் திட்டம்: சீன எதிர்ப்பின் வெளிப்பாடா?சிறீலங்காவைத் தொடர்ந்து பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கப் போவதாக அதானி துறைமுகங்கள் மற்றும் பொருண்மிய வலயத்துக்கான நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்ற கரான் அதானி (Karan Adani) கருத்துத் தெரிவித்தார். இந்தியாவின் துறைமுகங்களை இயக்குகின்ற பெரும் நிறுவனமாக அதானி குழுமம் விளங்குகின்றது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு இரு திசைகளிலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் அதானி குழுமம், தற்போது பங்களாதேஷ், வியட்நாம், தன்சானியா போன்ற நாடுகளுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவிருக்கின்றது. சிறீலங்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்தக் குழுமம் ஏற்கனவே கட்டமைத்துக்கொண்டிருக்கின்ற துறைமுகங்களுக்கு இது மேலதிகமானதாகும்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹின்டன்பேர்க் ஆய்வு (Hindenberg Research), அதானி குழுமத்தின் நிதிக்கையாடல் தொடர்பாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலே முன்வைத்திருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளின் பாதிப்புகளிலிருந்து தற்போது மீண்டு எழுகின்ற அதானி குழுமம், உலகளாவிய வகையில், தனது வர்த்தக நடவடிக்கைகளை பரவலாக்க முயற்சிக்கிறது என்று நெஸ்றோவிச் குறிப்பிட்டார்.

இந்திய வர்த்தக முயற்சிகள் விரைவில் உலகளாவிய தன்மையைப் பெறவிருக்கின்றன. சிறீலங்காவில் அதானி குழுமம் எடுக்கின்ற முயற்சி வெற்றி பெறுமாயின், அதே அணுகுமுறையை அந்தக் குழுமம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கும் சாத்தியம் இருக்கிறது.

தனியார் அமைப்புகளுடன் கூட்டு

சிறீலங்காவின் புதிய துறைமுக முனையத்தைப் பொறுத்தவரையில், தனியார் நிறுவனங்களுடன் அமெரிக்கா கைகோர்த்ததற்கான காரணம், இந்திய அரச நிறுவனங்களுடன் கூட்டுச் சேரும் போது அரச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படலாம் என்பதாகும். தனியார் மூலம் திட்டங்களை முன்னெடுப்பது செயற்றிறன்மிக்கது மட்டுமன்றி, நடைமுறைக்கும்  இலகுவானது என்பதை இந்திய அரசு உணரத்தொடங்கியுள்ளது என்று புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற ஒப்சேவர் றிசேச் பவுண்டேஷன் (Observer Research Foundation) என்ற அமைப்பின் மூலோபாயக் கற்கைநெறிகளுக்குப் பொறுப்பாக இருக்கின்ற துணைப்பேராசிரியரான ஆதித்திய கௌதாரா சிவமூர்த்தி கருத்துத் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்கா நிதியுதவியை வழங்குவதோடு நிறுத்திக்கொள்கிறது. இவ்வாறு தனியார் அமைப்புகளுடன் கூட்டுச் சேர்வது அந்த நாடுகளில் அமெரிக்கப் பிரசன்னத்தை வலுவாக்க உதவிசெய்யும்.

500 மில்லியன்கள் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த மின்சக்தியைக் கடத்துகின்ற கட்டமைப்பை (Power Transmission Lines)  நேபாள நாட்டில் உருவாக்கி, அங்கே உருவாக்கப்படும் மின்சக்தியை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சிக்கு, இந்தத் திட்டம் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை நிர்மாணிக்கும் உள்நோக்கம் கொண்டது எனக் கருதப்பட்டதால் இந்திய எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மில்லேனியம் சலெஞ் (Millennium Challenge) என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து நேபாளம் முன்னெடுத்த இந்த அபிவிருத்தித் திட்டம், 5 வருடங்களாகத் தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்திய வர்த்தகர்களோடு இணைந்து செயற்படுவதன் மூலம் இவ்வாறான தடைகளை அமெரிக்காவால் எதிர்காலத்தில் தாண்டக்கூடியதாக இருக்கும் என்று சிவமூர்த்தி கூறினார். அமெரிக்காவிடம் நிதியும் இவை தொடர்பான தொழில்நுட்ப அறிவும் இருக்கிறதென்பது இந்தியாவுக்குத் தெரியும். அதே சமயம், இவ்வாறான நாடுகளில் திட்டங்களை எப்படி முன்னெடுக்கலாம் என்ற பட்டறிவு இந்தியாவுக்கு இருக்கிறது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்.

இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனா முன்னெடுக்கும் வர்த்தக முயற்சிகள் காத்திரமானவை. எப்படிப்பட்ட பிரதேசங்களை புதுடெல்லி தனது மூலோபாயப் பிரதேசங்கள் என்று பாரம்பரியமாகக் கருதியிருந்ததோ அவ்வாறான பிரதேசங்களில் குறிப்பாக சிறீலங்கா, மாலை தீவு போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களாகச் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வந்திருக்கிறது

மாலைதீவை விட்டு இந்தியா வெளியேறுகிறதா?


“ஒரு சமநிலையை  எவ்வாறு காணலாம் என்பதே இங்குள்ள கேள்வி. கடைசியாக, களநிலைமை என்று வருகின்ற போது வெற்றிபெறுகின்ற ஆற்றல் யாருக்குள்ளது என்பது தான் முக்கிய கேள்வி” என்று இலண்டன் கிங்ஸ் கல்லூhயில் (London Kings College) பன்னாட்டு உறவு விடயத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகின்ற ஹாஷ் பான்ட் (Harsh Pant) தெரிவித்தார். தனது செல்வாக்கை சீனா மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்லும் யதார்த்தத்தை அமெரிக்கா புரிந்துகொள்கிறது. ஆகவே முற்றிலும் புத்தம் புதிய வகைகளில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் தேவை இருக்கிறது என்று அமெரிக்கா கருதுகிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னந்தனியனாக தனது செல்வாக்கைப் பேண முடியும் என்று நீண்ட காலமாக இந்தியா சிந்தித்து வந்தது. தொடர்ந்து தாம் தனியாக இயங்க முடியாது என்பதை தற்போது இந்தியா மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஒத்த சிந்தனையைக் கொண்ட நாடுகள் இணைந்து பணிபுரியாது சமநிலையைப் பேண முடியாது என்பது தற்போது புரிந்துகொள்ளப்படுகிறது.

இவ்வாறான சிந்தனை கொண்ட ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இங்கு இணைந்துகொள்ள வேண்டும். இந்தியாவிடமும் அவ்வாறான சிந்தனையைக் கொண்ட ஏனைய நாடுகளிடமும் அவ்வாறான ஒரு முனைப்பைப் பார்க்கக்கூடியதாகவிருக்கிறது.

இவ்வாறான விடயங்களை எதிர்காலத்தில் அதிகமாகவே எதிர்பார்க்கலாம் என்று பான்ட மேலும் கூறினார்.

தமிழில்: ஜெயந்திரன்

நன்றி: South China Morning Post