அரசமைப்பில் மாற்றம் இப்போது அவசியமில்லை – சட்டத்தரணிகளின் ஒன்றிணைவு

அரசமைப்பில் தற்போது மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை. முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தம் தேவையில்லாமல் விடயத்தை குழப்பி தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று சட்டத்தரணிகளின் ஒன்றிணைவு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசமைப்புக்கான 22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் 30 நாட்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரை ஜனாதிபதி கோரவேண்டிய நிலைமை ஏற்படும். இதனால், நாடு சமாந்திரமாக இரண்டு தேசிய தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஒரு தேர்தலின் பின்னர் மற்றுமொரு தேர்தல் நடை பெறும் இது குழப்பமான நிலையை ஏற்படுத்தும்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். உள்ளூராட்சி தேர்தலை நடத்த நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலத்தின் உச்சவரம்பை
குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்மொழியப்பட்ட திருத்தம் தேவையில்லாமல் விடயங்களை குழப்பரமாக்கி தேர்தல் நடைமுறைகளை சீர்குலைய செய்யும் முயற்சியாக இருக்கலாம்.

எனவே, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் தேர்தல் நடைமுறைகளை சூழ்ச்சித் திறத்துடன் கையாளும் முயற்சி. இதனை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.