அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தம்மிக்க ஆலோசனை? பெரமுனவின் நகா்வுகளால் அதிருப்தி

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு பொது ஜன பெரமுன கட்சி தனக்கு ஆதரவு வழங்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் தயார் என அறிவித்து, அக்கட்சியால் முன் வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நிறைவேற்றி வருகின்றார்.

தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் ரணில் பக்கம் சாயும் நகர்வை மொட்டு கட்சி கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையிலேயே தம்மிக்க பெரேரா, தனக்கு ஆதரவு வழங்கும் முடிவை மொட்டு கட்சி எடுக்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகதனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.