இந்தியப் பிரதமா் மோடியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

ranil.modi இந்தியப் பிரதமா் மோடியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்துஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. வெற்றி பெற்றதற்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தனது ருவிட்டரில் ரணில் பதிவிட்டுள்ளார்.

“நெருங்கிய அண்டை நாடாக, இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்க்கின்றது” என்றும் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.