இலங்கைக்கு நிதி கிடைத்தது தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி

அனைத்துலக நாணயநிதியத்தின் இரண்டாவது தவணைப் பணம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது தொடர்பில் அமெரிக்கா திருப்தி கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சாங் கடந்த வியாழக்கிழமை(14) தெரிவித்துள்ளார்.

இந்த நிதி கடைத்தது என்பது இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அதாவது நல்லாட்சி மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பன முக்கியமானது.

இலங்கையின் பொருளாதார உறுதித்தன்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாணய நிதியம் கடந்த செவ்வாய்க்கிழமை(2) இலங்கைக்கு இரண்டாம் தவணைப் பணமாக 337 மில்லியன் டொலாகளை வழங்க அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே, இன நல்லிணக்கப்பாடுகள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் உலகத்தமிழர் பேரவையும், இலங்கையில் உள்ள பௌத்த துறவிகளின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து கடந்த வாரம் வெளியிட்ட ஹிமாலையா பிரகடனம் செவ்வாய்க்கிழமை(12) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கத்துக்கான இந்த ஆரம்ப நடவடிக்கையை தான் வரவேற்பதாகவும், அது இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் எனவும் பிரகனடத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது உரையில் தெரிவித்திருந்தார்.