இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை – ஐ.எம்.எப்

இலங்கை அரசு பொருளாதாரத்தில் உறுதித்தன்மையை நோக்கி நகர்ந்துள்ளதே தவிர அதன் பொருளாதாரம் முன்னைய நிலைக்கு திரும்புவதற்கான சாந்தியங்கள் இல்லை என அனைத்துலக நாணய நிதியம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி இடம்பெற்ற பின்னர் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்குவதாக அனைத்துலக நாணயநிதியம் தெரிவித்திருந்தது. அதற்கு பல நிபந்தனைகளையும் அது விதித்திருந்தது.

இலங்கை அரசு நிபந்தனைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக என ஆய்வுகளை மேற்கொண்ட அனைத்துலக நாணய நிதியக் குழு இன்று (27) அதன் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது என அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.