இலங்கை காவல்துறையினரால் தமிழ் இளைஞர் படுகொலை

வட்டுக்கோட்டையில் இலங்கை காவல்துறையினரின் சித்திரவதையில் தமிழ் இளைஞன் ஒருவர் ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில்  மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடலாம் என்ற அச்சத்தில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தைச்சூழ இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் விளக்கமறியல் கைதி கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என சட்ட மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் கடும் சித்திரவதை காரணமாக எங்கள் அயல் கிராமான சித்தங்கேணி கலைவாணி வீதியை சேர்த்த இளைஞன் நுரையீரல் பாதிக்கப்பட்டு அகாலமரணம் அடைந்துள்ளார் என இறந்தவரின் அயலவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞனின் தந்தை, தந்தையின் சகோதரர்கள் காலம் காலமாக எங்கள் வயல்களில் வளவுகளில் வேலை செய்யும்பணியாளர்கள்.மிகவும் நேர்மையும் கண்ணியமும் மிக்க மனிதர்கள். என் தந்தையர் காலத்திலிருந்தே கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள். தவணைக்கு முதலே தந்து விடும் நாணயமானவர்கள்.எங்கள் குடும்பத்தில் உறவுகளாய் இன்றும் பழகுபவர்கள். எங்கள் வயல் பக்கம் பக்கமாய் அவர்களும் விவசாயம் செய்பவர்கள்.இந்த முறை நெல் அறுவடை காலத்தில் கூட இறந்த இளைஞன் தன் இயந்திரத்தை கொண்டு வந்து எங்களுக்கு நெல் தூற்றி தந்தார்.சிறு வயது முதலே எம்மோடு பழகியவர்களுக்கு இப்படி ஒரு துயர் என்று அறிந்து மனம் கிடந்து புலம்புகிறது.மகனை இழந்து தவிக்கும் தந்தைக்கு எந்த வார்த்தை கொண்டு ஆறுதல் கூற முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.