இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கையில் 25 மாவட்டங்கள் காணப்பட்ட போதிலும், தேர்தல் காலப் பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களாகக் கணிப்பிடப்படும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமாகவும், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகியன வன்னி தேர்தல் மாவட்டமாகவும் கருதப்பட்டு, வாக்களிப்புப் பணிகள் இடம்பெறும்.

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லை.