இஸ்ரேலில் தொடரும் மோதல்கள் – இரு தரப்பிலும் 600 பேர் பலி

நேற்று சனிக்கிழமை (7) இஸ்ரேலினுள் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதல் இன்றும் (8) தொடர்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் 20 இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு அவற்கை கைப்பற்றியபோதும் அவர்களிடம் இருந்து பல பகுதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் 7 இற்கு மேற்பட்ட பகுதிககளில் தாக்குதல்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதல்களில் 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய வான்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 256 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 1800 பேர்வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே> ஹாமாஸின் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அந்தோனி பிளிங்டன் எகிப்திடம் வேண்டுகோள்.

ஹாமாஸினால் சிறைப்படிக்கப்பட்ட 100 இஸ்ரேலியர்களை மீட்பதற்கும் இஸ்ரேல் எகிப்தின் உதவியை நாடியுள்ளது.