உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு

பண்டார தென்னகோன் உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு - உறுதிப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு
உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினரை வௌிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பிவைக்கும் ஆட்கடத்தல் தொடர்பில் இதுவரை 287 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளையில், போா் முனையிலிருந்து தப்பிவந்தவா்களின் தகவல்களின்படி சுமாா் ஆயிரம் வரையிலான இலங்கையின் முன்னாள் இராணுவத்தினா் இந்த யுத்த முனையில் பணியாற்றுவதாகவும், 200 போ் வரையில் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதவா்கள் சிலா் பல இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு போா் முனைக்கு ஆட்களை அனுப்பிவைப்பதாக விசாரணைகளின் போது தெரியவந்திருக்கின்றது.