எங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர் – பொது ஜன பெரமுனவின் செயலாளா் கூறுகிறாா்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளித்து வருகின்றது என்றும், விரைவில் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை அறிவிப்போம் என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான சாகர கரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று திஙகட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்றும், ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றீர்களா? அல்லது தனியாக வேறு பயணத்தை மேற்கொள்ளப் போகின்றீர்களா? என்றும் ஊடகவிலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயேய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “எங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர். மற்றைய கட்சிகள் போன்று வங்குரோத்து நிலையில் இல்லை. மற்றைய கட்சிகளை விடவும் உயர்ந்த இடத்தலேயே இருக்கின்றோம். அடுத்த தேர்தலின் போது நாட்டுக்கு பொருத்தமான வேட்பாளரை முன்னிறுத்துவோம். எங்களிடம்
உள்ள வேட்பாளர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். இவர்களில் வெற்றிப்பெறக்கூடிய வேட்பாளரை அறிவிப்போம்.

இதேவேளை, கோதாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலப்பகுதிக்கென்றே தற்போதைய ஜனாதிபதியை நியமிக்க இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டோம். அதன்படி ஜனாதிபதிக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்ற இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தினோம். இதுமட்டுமே அவருடான இணக்கப்பாடாகும். இனி நாட்டுக்கு பொருத்தமான ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம். கட்சியென்ற ரீதியில் நாட்டை முன்னால் கொண்டு செல்லக்கூடிய, நாட்டை நேசிக்கும், எமது கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும், பொருளாதார ரீதியில் நாட்டை கொண்டு செல்லக்கூடிய ஒருவரை கொண்டுவருவோம்” என்றும் சாகர காரியவாசம் தெரிவித்தாா்.