ஐ.நாவுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும்-ஆய்வாளர் பற்றிமாகரன்

ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம். ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் (படங்கள்) - ஐபிசி தமிழ்

இன்று என்றுமில்லாத அளவுக்குப் பலநிலைகளில் ஈழத்தமிழர்களின் உயிரும் உடமைகளும் நாளாந்த வாழ்வும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஈழத்தமிழர்களுடைய தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது.

இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் வருடத்தையும் அதன் மையக்கருத்துக்களுடன் இணைந்து கொண்டாடுவதன் மூலம் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பாடல்களையும் உரையாடல்களையும் இலகுவாக்குவதுடன் சமகாலத்துக்கு ஏற்றவகையில் சமுக பொருளாதார அரசியல் அறிவினையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழ் மக்கள் பெற்றிடவும் உதவும்.
இதனை மையமாக வைத்து 01.06.2023 வியாழக்கிழமை முதல் 08.06. 2023 வியாழக்கிழமை வரை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாட்களை எவ்வாறு ஈழத்தமிழர் பயன்படுத்தலாம் என எடுத்து நோக்குவது இக்கட்டுரையின் இலக்காகவுள்ளது.

01.06. 2023 அன்று உலகப் பெற்றோர் நாளுடன் யூன் மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக நாட்கள் ஆரம்பமாயின. பெற்றோர்கள் என்ற ஒவ்வொரு மனிதனினதும் வாழ்வின் ஊற்றுக்கள் என்ற அடிப்படையில் இவ்வுலக நாள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘மகிழ்ச்சியாக உடல்நலத்துடன் நம்பிக்கையுள்ளவராக வாழும் சிறுவர்களை உருவாக்குவதே பெற்றோர் என்ற சக்தியே’ என்பது 2023ம் ஆண்டுக்கான உலக பெற்றோர் நாளின் மையக்கருவாக உள்ளது. 1992 முதல் பெற்றோரைப் பாராட்டவும் அவர்களின் கடமைகளை உணர்த்தவும் அவற்றை பெற்றோர் செவ்வனே செய்வதற்கு அரசாங்கம் உரிய சட்டங்கiளுயம் நிதியளிப்புக்களையும் அளித்து சிறந்த குடிமக்களாக இளையவர் எழுச்சியுற உதவ வேண்டும் எனபதை வலியுறுத்தி இவ்வுலகநாள் யூன் 1ம்நாளில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சிறப்பான முறையில் வளர்த்து உருவாக்குவதற்குச் சிங்கள அரசாங்கங்கள் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

போதைப்பழக்கத்தையும் பாலியல் துஸ்பிரயோகங்களையும் சிறிலங்காப் படையினரே திட்டமிட்ட முறையில் ஏற்படுத்தி வருகின்றன என்பது இன்றைய ஈழத்தமிழ்ப் பெற்றோரின் கவலையாக மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் சிறவர்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அமைப்புக்கள் பலவற்றின் கவலையாகவும் உள்ளது. எனவே அனைத்துலகப் பெற்றோர் நாளில் உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழ்ப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த பாதுகாப்புக்களையும் சுதந்திரமான வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவ வேண்டும என உலகத் தமிழர்கள் உலகை வலியுறுத்த வேண்டும்.

யூன் 3ம் நாள் உலக ஈருளி நாள் றுழசடன டீiஉலஉடந னுயல உடல் உள நலத்திற்கும் பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் நாளாந்த வாழ்வின் உயர்ச்சிக்கும் பைசைக்கிளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகக் கொண்டாடப்பட்டது. தாயகத்தில் இன்னமும் ஈருளி வாங்க இயலாத வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் பலர் உள்ளனர். இந்நாளில் உலகத் தமிழர்கள் மனித வாழ்வுக்கு அடிப்படையில் உதவுகிற ஈருளி தேவைப்படுபவர்கள் வாங்கிப் பயன்படுத்த உதவும் திட்டங்களை அத்துடன் ஈருpய உருவாக்கிச்; செயற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் வழி பலருக்கு கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிகளையும் சமுக ஊடாடல்களையும் தாமகவே ஏற்படுத்தவும் உதவி தனிமை உணர்வில் இருந்து விடுபட்டுச் சமுகமாக மகிழ்ந்து வாதழ இது உதவும்.

நாள் யூன் 4ம்நாள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ள அப்பாவிச் சிறுவர்களுக்கான நாளை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடியது. ஆண்டொன்றுக்கு ஒரு ஆண்டுக்கு 10500 சிறுவர்கள் வீதம் 2014 முதல் 2020க்கு இடையில் 104100 (ஒரு இலட்சத்து நாலாயிரத்து நூறு) சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது உடல் உறுப்புக்களை இழந்து வாழ்கின்றனர். 25700 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் 14200 சிறுவர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 14900 சிறுவர்களுக்கு மனிதாய உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. 13900 சிறுவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரத்தையும் ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.

எங்கள் ஈழத் தாயகத்திலும் எமது சிறுவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிறிலங்காவின் ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட அல்லது உடல் உறுப்புக்களை இழநத வரலாற்றையும் மேற்குறித்த மற்றைய நிலைகளிலும் துன்புறும் வாழ்வையும் நாமறிவோம். எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் சிறுவர்களை எல்லாவிதமான ஆக்கிரமிப்புக்களிலும் இருந்து விடுவிக்கும் உரிமையும் கடமையும் உண்டு என்பதை மனதிருத்திக் கொண்டு மறுநாள் யூன் 5ம் நாள் அனைத்துலகச் சூழல் சுற்றாடல் நாளை ஐக்கியநாடுகள் சபை கொண்டாடி ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் தொன் பிளாஸ்ரிக் பொருட்கள் பய்னபாட்டுக்கு வருகின்ற பொழுதம் 10வீதமானவையே மறுஉற்பத்திக்கு உள்ளாக்ப்படுகின்றன எனவும் மிகுதியான 2200 ஈவிள் கோபுரம் அளவு நிறையுள்ள 19 முதல் 20 மில்லியன் தொன் நிறையுள்ள பிளாஸ்திரிக் பொருட்கள் ஆறுகளிலும் குளம் குட்டைகளிலும் நதிகளிலும் கடலிலும் கொட்டப்படுகின்றன.

அதிலும் 11 மில்லியன் டொன் பிளாஸ்திரிக் பொருட்கள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன என்றும் 2040இல் இத்தொகை 3 மடங்காக அதிகரிக்கும் எனவும் ஒவ்வொரு மனிதனும் ஆண்டொன்றுக்கு 50000 பிளாஸ்திரிக் பொதிகளைப் பெற்று வருகின்றனர் எனவும் இத்துடன் நுண்பிளாஸ்திரிக் துணிக்கைகள் மனித உணவிலும் குடிநீரிலும் சுவாசக் காற்றிலும் கலந்து வருகின்றன எனவும் பிளாஸ்திரிக் பயன்பாட்டின் விளைவுகள் குறித்த உண்மைகளை உரக்கச் சொல்லி இந்தப் பிளாஸ்திரிக் பிரச்சினைக்கு அதன் பயன்பாட்டை இயற்கைப் பொருட்களால் மாற்றீடு செய்தும் பிளாஸ்திரிக் கழிவுகளை மறுஉற்பத்திக்குள்ளாக்கியும் உலகையும் மனிதர்களையும் காப்பதற்கான தீர்வு காணும் பொறுப்பை ஒவ்வொரு மனிதனிடமும் ஒப்படைத்துள்ளது.

எங்கள் மாணவர்கள் இடமே நிறைய நல்லாக்கப் படைப்பாக்கச் சிந்தனைகள் உள்ளன. உதாரணமாக தருண் சிறிரங்கள் என்னும் ஆசிரியை முனைவர் றீற்றா பற்றிமாகரனிடம் உயர்தரத் தமிழ் கற்கும் மாணவன் இவ்வாண்டு அனைத்துலகச் சூழல் சுற்றாடல் நாளில் அனைத்துலக மறு உற்பத்தி நாள் (றுழசடன சுநஉலஉடiபெ னுயல) கொண்டாடப்பட வேண்டும் என்ற தனது சொந்த எண்ணத்தை முன்வைத்தார். இவரைப் போல ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் படைப்பாக்கங்களும் கண்டுபிடிப்புக்களும் இன்றைய சுழல் சுற்றாடல் பாதுகாப்பின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வல்லனவாக உள்ளன.

மேலும் இலங்கைக் கடற்கரைகளில் எட்டு நாடுகளில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள் கரைஒதுங்குகின்றன என்ற நிலையில் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறைகாட்ட வேண்டியவர்களாக உள்ளனர்;. அதே வேளை சிறிலங்கா திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகங்களின் இயற்கையான சூழல் பாதுகாப்பு முறைகளை அழித்து வருவது குறித்தும் நாம் உலகின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியவர்களாக உள்ளோம்.

1956 யூன் 5ம்நாள் எஸ் டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசால் சிங்களம் அரசகருமமொழி என்கின்ற சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது கொல்வின் ஆர் டி சில்வா இருமொழி ஒருநாடு -ஒரு மொழி இருநாடு என்கிற நிலை உருவாகும் என இலங்கைப் பாராளுமன்றத்தில் எச்சரிப்பும் செய்தார். 1944ம் ஆண்டிலேயே ரணிலின் உறவினரான ஜே ஆர் ஜயவர்த்தனா ஐக்கிய தேசியக்கட்சியின் களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் சட்டத்தை முன்மொழிந்திருந்தார்.

இந்தச் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராகத் தமிழரசுக்கடசியினர் காலிமுகத் திடலில் செய்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை அரச படைகளின் ஆதரவுடன் கூடிய சிங்களக் காடையர்களைக் கொண்டு வன்முறைப்படுத்தி சிங்கள அரசாங்கம் அரசபயங்கரவாதத்தைத் தமிழ் மக்கள் மேல் தொடங்கியதும் கல்லோயாவில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களையும் வவனியாவில் புகைவண்டியில் பயணித்த தமிழர்களையும் இனஅழிப்பு நோக்கில் தாக்கி இனஅழிப்புப் பயணத்தைத் தொடங்கியது. இன்று ரணில் அதே பாணியில் சிங்கள பொலிசாரைக் கொண்டு தமிழ்த்தேசிய முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தைக் கொலைசெய்ய முயன்றும் தப்பிய நிலையில் கைதாக்கி வழக்குப்பதிந்தும் பாராளுமன்ற சிறப்புரிமை கூடத் தமிழ்ப்பிரதிநிதிகளுக்கு இல்லை என்னும் அளவுக்கு 67 ஆண்டுகள் அரசபயங்கரவாதமும் இனஅழிப்பும் தொடர்கிறது. இவை குறித்த உங்கள் எண்ணங்களையும் கூடவே யூன் 5 1975இல் வீரச்சாவைத் தழுவிய தியாகி சிவகுமாரன் அவர்கள் மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாகச் செயற்பட வேண்டுமென விடுத்த அழைப்பின் பின்னணியில ஈழத்தமிழ் மாணவர் எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் உலகெங்கும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களும் தங்கள் இளையோருக்கு மாணவ வயதிலேயே ஈழத்தமிழ் தேசிய மற்றும் வரலாற்று விழிப்பணர்வுள்ளவர்காளாக வாழப்பழக்க வேண்டும்.

யூன் 6ம் நாள் உலக ரஸ்ய மொழி நாள் கொண்டாடப்பட்டது. ரஸ்யர்கள் தான் திருக்குறளை உலகின் தலைசிறந்த மெய்ப்பொருளியல் நூலாகவும் சிலப்பதிகாரத்தை உலகின் குடிமக்கள் காப்பியமாகவும் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். கூடவே இலெமூரியாக் கண்டக் கொள்கையைத் தமது ஆய்வுகளால் வெளிப்படுத்தி உலகின் முதற்குடிகளாகத் தமிழர்களை இனங்காட்டியவர்கள்.

இந்நாளில் அவர்களின் மொழியின் சிறப்புக்களையும் எங்கள் மொழிக்கும் இரஸ்ய மொழிக்கும் இடையிலான உறவுகளையும் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு உலகின் மற்றைய மொழிகளுக்கும் எங்கள் தமிழ்மொழிக்குமுள்ள உறவுகள் குறித்த பண்பாட்டுத் தொடர்புகள் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
அத்துடன் யூன் 7ம் நாள் அனைத்துலக உணவுப்பாதுகாப்பு நாளாகவும் உள்ளது. 42000 பேர் உலகில் ஒவ்வொரு ஆண்டும் உணவுப்பாதுகாப்பின்மையால் இறந்து வருகின்றனர். இதில் 40 வீதமான 125000 பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இந்நிலையில் உணவுப்பாதுகாப்பு குறித்த அறிவார்ந்த விழிப்புணர்வு வளர்க்கப்படுவது சமுதாய நலனுக்கு மிகத்தேவையாகவுள்ளது.

இந்த அனைத்துலக நாட்களின் தொடர்ச்சியாக 08.06. 2023இல் உலக மாக்கடல் நாள் றுழசடன ழுஉநயn னயல கொண்டாடப்படுகிறது. மாகடல்களே எமக்கான ஒட்சிசனில் 50 வீதத்தைத் தருகின்றன. 30வீதமாக காபன் டை ஒக்சைட்டை மாக்கடல்களே உறிஞ்சுகின்றன. 40 மில்லியன் மக்கள் மாக்கடல்களிலேயே பொருளாதாரவாழ்வைப் பெறுகின்றனர்.

2050ம் ஆண்டளவில் உலகில் கடலில் உள்ள மீன்களை விடப் பிளாஸ்திரிக் பொருட்களினும் நுண்துணிக்கைகளதும் எண்ணிக்கை அதிகமாகவிருக்கும் என்னும் தகவலை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது. கடலில் உள்ள பிளாஸ்திரிக் பொருட்களை மீன்கள் உண்பதால் நுண்பிளாஸ்திரிக் துணிக்கைகள் மனிதர்கள் மீன் உணவுகளை உண்கின்ற பொழுது உடலுக்குள் சென்று உடல்நலத்திற்குப் பயங்கர தீங்குகளை விளைக்கும் என்ற எச்சரிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடல்களின் தூய்மை பேணப்படுதல் என்பது இந்த 2023ம் ஆண்டில் ‘அதிஉச்ச நடவடிக்கையாக’ முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாக்கடல்நாள் மையக்கருவாக உள்ளது.

அத்துடன் ஈழத்தமிழர்கள் இலங்கையின் இந்து மாக்கடலின் ஐந்தில் மூன்று பங்கு தங்கள் தயாகத்திலேயே உள்ளதால் இந்துமாக்கடலின் பாதுகாப்பும் அமைதியும ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் முன்நிபந்தனையாக உள்ளது என்பதையும் இந்நாளில் உலகிற்கு உரக்கச் சொல்லி, இந்து மாக்கடல் குறித்த உலக செயற்திட்டங்களில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பையும் உலகம் பெற்றுக்கொள்ள வேண்டிதன் முக்கியத்துவத்தை அறிவார்ந்த நிலையில் உலகிற்கு எடுத்து விளக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக உள்ளனர்.

வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் சிறிலங்கா அரசை மகிழ்வித்து தங்கள் நலன்களை ஈழத்தமிழரின் இந்துமாக்கடல் பரப்பில் நிலைநிறுத்தும் நோக்கிலேயே சிறிலங்கா ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தி வரும் இனஅழிப்புக்களையும் இனத்துடைப்புக்களையும் பண்பாட்டு இனஅழிப்புக்களையும் ஆதரித்து உலகின் மூத்த குடிகளாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையிலான அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை ஏற்க மறுத்து அவர்களைச் சிறிலங்கா இந்த நாகரிக உலகின் முன்பாகவே அநாகரீகமான முறையில் இனஅழிப்பு செய்ய அனுமதிக்கிறது என்பதையும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக அமைப்புக்களும் உலக மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லி ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல உலகால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை என்பதை இந்த உலக மாக்கடல் நாளில் வலியுறுத்த வேண்டும். இவ்வாறாக ஐக்கிய நாடுகள் சபையின் மற்றைய உலக நாட்களையும் ஈழத்தமிழர்கள் அணுகி உலகுக்கு தங்களின் உண்மைநிலைகளைத் தெளிவாக்க வேண்டும். .