மூதூர் சந்தனவெட்டைக் கிராமத்தில் ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கான இளையோரின் குரல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்  ஏற்பாட்டில், ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கான இளையோரின் குரல் என்ற தொனிப்பொருளின் கீழ் மூதூர் சந்தனவெட்டைக் கிராமத்தில் முன்னெடுக்கபட்ட நடமாடும் சேவை 21.11.2023ம் திகதி சந்தனவெட்டை கிராம அபிவிருத்திச் சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது.

மூதூர் கிராமத்தில் பழங்குடிகள் அதிகம் வாழும் இக்கிராமத்தில் அடிப்படைவசதிகள் மிக்க குறைவான நிலையில் அப்பகுதி மக்கள் தமது வளங்கள் வாய்ப்புக்களினையும் அணுகும் வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவும் பிரதான சமூகத்தின் இடைத்தொடர்பு மிகக் குறைவான நிலையில் இப்பகுதி மக்க்ளின் நிலைத்திருப்பு குறித்த சவால்களுக்கு உட்பட்ட சமூகத்தை உருவாக்கி வருகின்றது.

trinco indeg மூதூர் சந்தனவெட்டைக் கிராமத்தில் ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கான இளையோரின் குரல்பழங்குடிகள் என்ற குடியியல் ரீதியில் தங்களை இந்த நாட்டின் பிரஜையாக அடையாளப்படுத்திக்கொள்ள பொருத்தமான சட்ட ஆவணங்கள்ளைக் கொண்டிராத நிலையில் அரசினால் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அவர்களின் தேவைகளை அணுகும் வாய்ப்புக்களினைப் பெறத நிலையில் தமது எதிர்கால சமூகத்தின் நிலைத்திருப்பினையும் கேள்விக்குறிக்குள்ளக்கும் நிலை அதிகரித்துள்து.

பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பின்மை , கல்வி, மந்த போசாக்கு,  பால்நிலை சார்ந்த ஒழுங்கற்ற் சுகாதாரக்கட்டமைப்பு போன்றன அதிகரித்துள்ள் நிலையில்  இத்தகைய கிராமத்தின் பிரதான சமூகத்தினருடனான தொடர்பினையும், சேவை வழங்குனர்கள் அணுகும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சம்பூர் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு உத்தியோகத்தர்கள், மூதூர் சுகாதாரப் பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் பதிவாளர் கிளை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்ன்டத்தை உத்தியோகத்தர் மற்றும் கட்டைபறிச்சன் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளீர் அபிவிருத்திச் சங்கம், மதத்தலங்களின் நிர்வாக உறுப்பினர்கள்   பொதுமக்களென பலரும் கலந்து கொண்டதோடு, சந்தனவெட்டை கிராமத்தில் அடையாள அட்டை மீளப்புதுப்பித்தல், பிறப்பு இறப்பு மற்றும் விவாகப்பதிவிடலுக்கான விண்ணப்பங்களும் பதிவிடப்பட்டது.

பதிவாளரினால் உரிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 3 விவாகப்பதிவிடல்கள்  இடம்பெற்றதோடு, சுகாதாரப் பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர் அவர்களினால் கிராமங்களில் அதிகரித்துவரும் சுகாதார சீர்கேடுகள், விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டதோடு, குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி. பீரவீனா அவர்களினால் இளவயதுத்திருமணம், இயவயதுக் கர்ப்பம், மந்த போசாக்கு  தொடர்பாக பிள்ளைகளின் போசனை மட்டம் மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும் தமது வெளிக்கள விஜயங்களின் போது தம்மை அணுகுவதற்கு இங்குள்ள பெற்றோர்கள் விரும்புவதில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

பாடசாலை இடைவிலகலும் அதற்கான காரணமாக பெற்றோரின் இளவயதுத்திருமணத்தினால் பிற்ந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் இல்லாமையினால் பாடசாலைக்கு பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்டுவதில்லையென்றும் தொடர்ந்து இனிவரும் காலங்களில் இத்தகைய இடைவிலகலினைக் குறைத்துக்கொள்ளும் போது இச்சமூகத்தின் மாற்றத்தினை விரைவுபடுத்தலாம் என்பதை பதிவிட்டிருந்ததோடு, இந் நடமாடும் சேவை நிகழ்விற்கு விழுது இளையோர்கள் தமது முழு ஒத்தழைப்பினையும் வழங்கி இப்பகுதி மக்களின் சேவை அணுகுதலினை துரிதப்படுத்தியிருந்தனர்.