கடன் வழங்குநர்களுடன் பேசிக்கொண்டே தொடர்ந்தும் கடன் வாங்கும் இலங்கை

Loan கடன் வழங்குநர்களுடன் பேசிக்கொண்டே தொடர்ந்தும் கடன் வாங்கும் இலங்கைகடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தொடர்ந்தும் இலங்கை கடன் வாங்கி வருவதாக கண்டி பேராதனை பல்லைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான சிங்கள வார ஏடு ஒன்றுக்கு கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளதாவது:

செப்ரெம்பர் 2022 முதல் டிசம்பர் 31, 2023 வரை, கடனை மறுசீரமைக்க அரசாங்கம் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, 14.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது.

2022 செப்ரெம்பரில் 81.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்த கடன் தொகை டிசம்பர் 31, 2023-க்குள் 96.16 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. டொலரின் ரூபாய் மதிப்பைப் பொறுத்து இந்தக் கடனின் அளவு சிறிது மாறுபடலாம்.

2022 செப்ரெம்பரில் 35.84 பில்லியன் டொலர்களாக இருந்த உள்நாட்டுக் கடன், 2023 இறுதியில் 16.80 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 52.64 பில்லியனாகவும், 2022 செப்ரெம்பரில் 35.05 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டுக் கடன் 2.28 பில்லியனால் 37.33 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது.

கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தும் அதிகமாக கடன் வாங்க வேண்டி வரும் என்றார் அவர்.