கட்சித் தலைவர்களின் அவசர மாநாடு நாளை: கூட்டுகின்றார் மஹிந்த

தலைவர்கள் கூட்டமொன்றை அவசரமாகக் கூட்டுகின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. தற்போதைய சூழலில் உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

முக்கியமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் அனர்த்த நிலைமையால் அரசுக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டிய அவசியம் குறித்து இதன்போது கட்சித் தலைவர்கள் சிலர் வலி யுறுத்தவுள்ளனர்.

வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இங்கு எடுத்துக் கூறவுள்ளனர்.

முன்னதாக இன்று காலை மாவை சேனாதிராசா பிரதமருடன் தொலைபேசியில் உரையாடி மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாமல் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அது தொடர்பிலும் நாளைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.