கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 19 ஆவது சுனாமி நினைவு தினம்

ஆழிப்பேரலையின் சுனாமி தினமான இன்று (26) 19 வது  வருட சுனாமி நினைவு தினம் கிண்ணியா நகர சபையின் தோனா சிறுவர் பூங்காவில்  சுனாமியினால் உயிர் நீத்தவர்களுக்காக  அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இடம் பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி  தலைமயில் இடம் பெற்ற குறித்த நினைவு தினத்தில்  பிரதம அதிதியாக திருகோணமலை  மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி கலந்து சிறப்பித்தார். இதில் சுனாமியின் போது உயிரிழந்த உறவுகளுக்காக துஆ பிரார்த்தனைகளும் இடம் பெற்றன. இதே வேலை கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் விசேட பூஜைகள் நிகழ்த்தப்பட்டு உயிர் நீத்தவர்களுக்காக  கடலில் மலர் தூவப்பட்டு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் கே.சுகுனதாஸ்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை, செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், இளைஞர் அமைப்புக்கள், பாடசாலை மாணவிகள், சமூக ஆர்வலர்கள் ,மதத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

tsunami trinco 1 கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 19 ஆவது சுனாமி நினைவு தினம்

Trinco tsunami 2 கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 19 ஆவது சுனாமி நினைவு தினம்