கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இரண்டு வருட பூர்த்தி பிரார்த்தனை

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிங்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று(23)  காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி அவா்களின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது .
இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது அதனால் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனா்த்தங்கள் தொடா்பாக விழிப்பூட்டப்பட்டது.இதன் போது இவ் விபத்தில் 8 உயிர்கள் பழியாகின.
பாலத்தினை நிா்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதையும் தெளிவுபடுத்தியிருந்தாா்.
இதில் பலர் கலந்து கொண்டு துஆபிரார்த்தனையில் ஈடுபட்டனர்.