கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன சர்ச்சை – ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம் பி

IMG 20240529 WA0069 கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன சர்ச்சை - ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம் பிகிழக்கு மாகாணத்தில் நேற்று வழங்கப்பட இருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆசிரியர் நேர் முகப்பரீட்சைக்கு தோற்றிய பல விண்ணப்பதாரிகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்த இம்ரான் எம் .பி நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன் பொழுது ஆளுநர் அவர்களினால் எந்த ஒரு விண்ணப்பதாரிகளுக்கும் பாதிப்பு இல்லாதவாறு ஆசிரியர் நியமனங்கள் சில நாட்கள் தாமதமாகினாலும் விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
இதில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம் மற்றும் உப்பு வெளி பிரதேச சபையின் முன்னால் உப தவிசாளர் நௌபர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.