கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் காசா பகுதி மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் 5 ஆவது வாரத்தை கடந்த தொடர்கின்றன. வான் தாக்குதல் மூலம் இதுவரையில் 32000 தொன் வெடிகுண்டுகளை சிறிய பிரதேசத்தின் மீது கொட்டிய இஸ்ரேல் கடந்த 2 ஆம் நாளே முழு அளவிலான தரைத்தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

gaza north 1 கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்பல நூறு டாங்கிகள் மற்றும் கவசவாகனங்கள் சகிதம் மூன்று முனைகளால் நகர்வுகளை மேற்கொண்ட படையினர் வடக்கு காசாவின் கடற்கரை பகுதியை முற்றா கைப்பற்றி தற்போது உள்பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். முன்நகரும் படையணிகளில் இரண்டு அணிகள் தலா 200 – 300 வாகனங்கள் சகிதம் முன்நகர்கின்றன. மற்றைய அணி அதனை விட சிறிய படைஅணியாகும்.

இஸ்ரேலின் தென்பகுதியால் நகரும் அணி 2 கி.மீ அகலமான பதையால் முன்நகர்ந்து கடற்கரையூடாக ஜபாலியா பகுதியை அடைந்துள்ளது. சாற்றி அகதிகள் முகாமின் மறு எல்லையில் அது நிலைகொண்டுள்ளது. இரண்டாவது அணி காசாவை வடக்கு தெற்காக ஊடறுத்து மையப்பகுதி ஊடாக நகர்ந்து கடற்கரையை அடைந்து தற்போது வடக்காக திரும்பி துறைமுகப்பகுதிக்கு அண்மையாக நிலைகொண்டுள்ளது.

இந்த அணியை சேர்ந்த சில கொம்பனி படையினர் அல்-சிபா வைத்தியசாலையை பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மூன்றாவது சிறிய அணி எரோஸ் தடுப்பு நிலை (Erez checkpoint) ஊடாக பெயிற் கனூன் (Beit Hanoon) பகுதி நோக்கி முன்நகர்கின்றது. இரண்டு பிராதான அணிகள் மீதான ஹமாஸ் படையினரின் தாக்குதலின் கவனத்தை திசைதிருப்பும் நேக்கத்தையே இந்த அணி கொண்டுள்ளதாக தெரிகின்றது. இந்த அணி நகரத்தின் எல்லையை அடைந்து நிலைகொண்டுள்ளது.

கடந்த ஒரு வாரமா இந்த அணிகள் பெரிய அளவிலான நகர்வுகணை மேற்கொள்ளவில்லை என்பதை செய்மதி படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. கைப்பற்றப்பட்ட இடங்களை பலப்படுத்துவதில் தான் அவர்களின் கவனம் உள்ளது. தமது கவசவாகனங்கள் மற்றும் டாங்கிகளை மறைவாக நிறுத்தி, மண்ணுக்குள் புதைத்தவாறு தமக்கு முன் உள்ள திறந்த வெளியின் ஊடான ஹமாஸ் படையினரின் வரவுக்காக அவர்கள் காத்திருப்பது போல தெரிகின்றது.

அதேசமயம்,  கடந்த மாதம் 7 ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நாகல் ஒஸ் என்ற இடத்திலும் பெருமளவான கவச வாகனங்கள் சகிதம் இஸ்ரேலின் படையணிகள் நிலைகொண்டுள்ளன. நகர்வுகள் அற்று இருக்கும் இந்த அணிகள் பின்னிருக்கை படையினரால இருக்கலாம். களத்தில் இழப்புக்கள் ஏற்படும் இடங்களுக்கு அனுப்புவதற்காக அல்லது ஹமாஸ் படையினர் பலவீனமடைந்ததும் திடீர் தாக்குதலை பலவீனமான முனையில் நிகழ்த்துவது அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

istreal5 கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இதனிடையே, ஹமாஸின் பேரியல் தந்திரங்கள் வேறுபட்டதாகவே இருக்கின்றது களமுனையை பொறுத்து அவர்களின் தாக்குதல் உத்திகள் அமைந்துள்ளன. பல தாக்குதல்கள் தொடர்பான காணொளிகளை அவர்கள் வெளியிட்டுள்ளவருகின்றனர். ஆனால் அவர்கள் திறந்த வெளிகளில் சமரிடுவதை தவிர்த்தே வருகின்றனர். அதாவது தமது பலத்தை தக்கவைக்க முற்பட்டுவருகின்றனர்.

இஸ்ரேல் படையினர் நகர்ப்புறப் பகுதிகளுக்குள் நகரும்போது ஹமாஸ் படையினர் அவர்களை தாக்கிவருகின்றனர். எனினும் அவர்கள் பொறுமையுடன் எதுவும் செய்யாமல் காத்திருக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் சிறு பற்றைகள், இடிந்த கட்டிடங்கள் போன்றவற்றை உருமறைப்பாக பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் 160 கவசவாகனங்கள் மற்றும் டாங்கிகள் சேதமாக்கப்பட்டடு மற்றும் அழிக்கப்பட்டதாகவும், அதில் 48 மணிநேரத்தில் மட்டும் 25 வானகங்கள் அழிக்கப்பட்டதாகவும், கடந்த சனிக்கிழமை (11) குசாம் பிரிகேட்டை சேர்ந்த பேச்சாளர் தெரிவித்திருந்தார். சிறு சேதமடைந்த வானகங்களை அந்த இடத்தில் வைத்து திருத்த முடியும், கடுமையாக சேதமடைந்த வாகனங்களை கனமுனையில் இருந்து அகற்றப்படவேண்டும், அதாவது தளத்திற்கு எடுத்துச் சென்று திருத்த முடியும்.

tank 2 கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்ஆனால் அழிக்கப்பட்டவை அந்த இடத்தில் கைவிடப்படுவதேவழக்கம். எனினும் செய்டமதிப்படங்களை அவதானித்தபோது கடந்த 5 நாட்களில் இஸ்ரேல் 88 வாகனங்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு காணப்பட்ட 383 வானகங்களில் 23 விகிதமானவை அழிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் கூறுவதில் 50 விகிதமானவை உண்மையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

மேலும் இதுவரையில் இடம்பெற்ற சமரில் 48 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், அவர்களின் வானங்களின் இழப்புக்களை பார்க்கும்போது அதன் எண்ணிக்கை உயர்வாக இருக்கலாம். டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி கவசவாகனங்களை தகர்ப்பதற்கு அவர்கள் பல தாக்குதல் உத்திகளை பின்பற்றுகின்றனர். குண்டுகளை அதில் பொருத்தி அதன் பாதுகாப்பு கவசத்தை தகர்த்த பின்னர் அதன் மீது ஆர்.பி.ஜி தாக்குதலை நடத்துவது, கண்ணிவெடிகளை புதைப்பது மற்றும் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குவது என்பன அவர்களின் உத்திகள்.

இந்த தாக்குதல்களில் கவசப்படை பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேணல் செல்டக் சியோரும் கொல்லப்பட்டிருந்தார். இந்த இழப்பு அவர்கள் சந்தித்துவரும் இழப்புக்களுக்கு ஒரு சான்று என கருதப்படுகின்றது.

அதேசமயம், ஹிஸ்புல்லாக்களும் ரஸ்ய தயாரிப்பான கொனெற் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் டாங்கிகளையே குறிவைத்து வருகின்றனர். புல டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 7 இடம்பெற்ற தாக்குதலிலும் இஸ்ரேல் பல டசின் டாங்கிகளையும், நூறுக்கு மேற்பட்ட கவசவாகனங்களை இழந்திருந்தது. எனவே தான் 2005 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட மேக்காவா-3 வகை டாங்களையும் அவர்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு மேக்காவா-5 வகையான நவீன டாங்கிகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்த இஸ்ரேல் தற்போது அதனை எட்டவில்லை என தெரிகின்றது.

hamas itally mines from ukraine கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அதாவது தற்போது இடம்பெறும் போரில் இரு தரப்பும் கடுமையான இழப்புக்களை சந்தித்துவருகின்றனர் என்பது உண்மை, எனினும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை என்பது நடக்கும் போரில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. அதவை தான் ஹெரட்ஸ் இதழின் படைத்துறை ஆய்வாளர் அமோஸ் கரிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹமாஸ் படையினரை சரணடைய வைக்க அவர்களால் முடியவில்லை மேலும் கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டுக்கு இஸ்ரேல் செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். கைதிகளை படை நடவடிக்கை மூலம் மீட்காது பரிமாற்றத்திற்கு சென்றால் அது ஹமாசுக்கு இரட்டிப்பான வெற்றியை வழங்கும் என அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.