சமூகங்களை ஒருங்கிணைப்பதால் தான் அமைதி ஏற்படும் – ஜுலி சங்

நாட்டின் உறுதித்தன்மைக்காக கருத்துச் சுதந்திரத்தை தியாகம் செய்ய முடியாது என அனைத்துலக அமைதிக்கான நாள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்கள் நேற்று (22) தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அவர்களில் பலர் அமைதி தொடர்பாகவே பேசுகின்றனர். உலகில் பல நாடுகளில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. சில உள்நாட்டிலும், சில வெளிநாடுகளினாலும் உள்ள அச்சுறுத்தல்கள்.

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர் வன் கொலன் 50 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையார் இலங்கைக்கான தூதுவராக இருந்தபோது இலங்கையில் இருந்தவர். அவர் இங்குள்ள மீனவ சமூகங்களை சந்தித்துள்ளார்.

பல சமூகங்களை சேர்ந்த கிரம மக்களுக்கான மீன்பிடித்திட்டங்களை உருவாக்க முன்வந்துள்ளார்.ஸ்கோர் என்ற அமைப்பின் ஊடாக அந்த உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைதி என்பது பொருளாதார வளர்ச்சி ஊடாக சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் எட்டப்படுவதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.