செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தம் – பல கப்பல்களை காணவில்லை?

இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு கப்பல்கள் மீது நேற்று மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் எம்எஸ்சி அலன்ஜா மற்றும் எம்எஸ்சி பிளற்றினம் 3 ஆகிய கப்பல்கள் சேதமடைந்ததாக ஏமனின் படைத்துறை பேச்சாளர் பிரிகெடியர் ஜெனரல் ஜாயா சாரி தெரிவித்துள்ளார். தமது கட்டளைகளுக்கு பணிய மறுத்த கப்பல்கள் மீது கடற்படை கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கும் கப்பல்களிடம் இருந்து உதவிக்கான அழைப்புக்கள் கிடைத்ததாக பிரித்தானியாவின் கடல் கண்காணிப்பு அமைப்பான யுகேஎம்ரிஓ தெரிpவத்துள்ளது. எனினும் கப்பல்களில் எற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

Maersk company செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தம் - பல கப்பல்களை காணவில்லை?இந்த கப்பல்கள் எம்.எஸ்.சி நிறுவனங்களுக்கும்> கபாக் லொயிட் ஏஜி நிறுவனங்களுக்ம் சொந்தமானவை.

ஏவுகணைத்த தாக்குதல்களை உறுதிப்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் லைபீரியன் கொடியுடன் பப் எல் மனடீப் கால்வாயினூடாக பயணித்த இந்த கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், சேதமங்கள் மதிப்பிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், 15000 தொன் எடைகொண்ட அல் ஜாஸ்ரா என்ற ஜேர்மனியை தளமாகக் கொண்ட ஹபக் லொயிட் ஏஜி நிறுவனத்துக்கு சொந்தமாக கப்பலும் வியாழக்கிழமை ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதலில் சிக்கி சேதமடைந்தாhக பிரித்தானியாவின் அம்பிரே என்ற கடல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொள்கலன்கள் கடலில் வீழந்ததாகவும், கப்பல் கடுமையாக சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செங்கடலின் மொச்சா துறைமுகத்தில் இருந்து 50 கடல் மைல்கள் தொலையில் இந்த சம்வவம் இடம்பெற்றுள்ளது.

ஏ.பி. மொலர் மார்க்ஸ் என்ற கப்பல் தாக்கப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கப்பல் செதமடைந்தபோதும், பணியாளர்கள் காயமடையவில்லை. இந்த கப்பல் பின்னர் அவசரமாக சவுதி அரேபியாவின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏ.பி. மொலர் மார்க்ஸ் தாக்குதலின் பின்னர் கபக் லொயிட்ஸ் ஏ.ஜி நிறுவனம் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த பிரச்சனையை கையாளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கப்பல்களை பாதுகாக்குமாறு European Community Shipowners’ Associations (ECSA) and International Chamber of Shipping.  ஆகிய அமைப்புக்கள் கொரிக்கையை முன்வைத்துள்ளன.

கோபென்கெயினை தளமாகக் கொண்ட ஏ.பி. மொலர் மார்க்ஸ் கப்பல் தென்னாபிரிக்கை சுற்றி செல்ல தீர்மானித்தாலும் பின்னர் செலவுகள் காரணமாக அது கைவிடப்பட்டதாக த புளும்பேர்க் ஊடகம் தெரிவித்தள்ளது.

கடல் பயணத்ததை குறைத்து கார்பன் டைஒக்சைட் வெளியிடப்படும் அளவை குறைக்க வேண்டும் என கோப்-28 இல் பேசப்பட்டபொதும், அது தற்போது எதிர்மறையான விளைவையே எதிர்கொண்டுள்ளது.

இதனிடையே, மார்ஸ்க் கப்பல் நிறுவனம் செங்கடலின் ஊடான தனது பயணத்தை நிறுத்தியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. தொடர் தாக்குதல்கள், ஏமன் படையினரால் விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் அதற்கு காரணம் என அது தெரிவித்தள்ளது.

Ruen செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து நிறுத்தம் - பல கப்பல்களை காணவில்லை?அதேசமயம், கபக் லொயிட்ஸ் நிறுவனமும் எதிர்வரும் 3 நாட்களுக்கு செங்கடல் ஊடான தனது கப்பல் சேவைகளை நிறுத்தப்பபோவதாக தெரிவித்துள்ளது. அது நிரந்தரமாக நிறுத்தப்படுமாக என்பதை ஆய்வு செய்வதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், பல்கெரியாவைச் சேர்ந்த Ruen என்ற சரக்கு கப்பலை ஹதீஸ் அமைப்பினர் கைப்பற்றிச் சென்றுள்ளதாக பல்கேரியாவின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கப்பலுடன் தற்போதுவரையிலும் தொடர்புகள் கிடைக்கவில்லை என அது மேலும் தெரிவித்துள்ளது.

ஏவ்வாறு இந்த நிலையை சமாளிப்பது? என்று தற்போது கப்பல் நிறுவனங்கள் சிந்தித்துவருகின்றன. அமெரிக்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கடற்படை கப்பல்களையும் மீறி தாக்குதல்கள் இடம்பெறுவது என்பது நிலமை கைமீறிப்போவதையே காட்டுகின்றது.

ஓவ்வொருநாளும் பல நூறு கப்பல்கள் செல்லும் இந்த பாதையில் எவ்வாறு மேற்குலகம் மற்றும் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைத்து தாக்குகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கப்பல்களை இனங்கட்டு கொடுப்பதில் ஈரானின் பங்கு உள்ளதாக என்ற கேள்விகளும் ஏழாமலில்லை.

வருடத்திற்கு 17000 கப்பல்கள் பயணிக்கும் இந்த பாதை முடக்கப்பட்டால் எதிர்காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இரஜதந்திர அணுகுமுறை மூலம் பிரச்சனையை அணுகுவதே தற்போதைய வழி என பல கப்பல் நிறுவனங்கள் சிந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.