சேனையூர் நெல்லி குள மலை உடைப்பு விவகாரம் என்ன? மக்கள் கேள்வி

9 சேனையூர் நெல்லி குள மலை உடைப்பு விவகாரம் என்ன? மக்கள் கேள்விமூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சேனையூர் நெல்லி குளம் மலை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் விசேட பூஜை இடம் பெற்றது .அண்மையில் இந்த பகுதியில் உள்ள மலையை உடைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட போது பத்து பேரை மூதூர் பொலிஸார் கைது செய்தனர்.

ஆனாலும் தற்போது பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் இது எதிர்காலத்தில் தடைப்படுமா என அப் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்ற மக்கள் இந்த பகுதியில் உள்ள மலையின் பாறை உடைப்பால் பல பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறப்பட்ட போதிலும் பாறை உடைப்பு தொடர்கிறது அனுமதி வழங்கப்பட்டதால் இது நடைபெறுகிறது ஆனால் அப்பாவி மக்களை கைது செய்தனர்.

இது போன்ற மலை உடைப்பு விடயத்தை நிறுத்த வேண்டும் என கோருகின்றனர்.