ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் இடம்பெறவிருந்த வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் விசேட உரை மட்டும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் இடம்பெறவிருந்த விவாதத்தையும் நடத்துவதில்லையென ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும் – எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.