ஜே.வி.பியினர் இந்தியா சென்றது நல்ல விடயம் – உதய கம்மன்பில

“இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் நிலைப்பாடு மாறியுள்ளமை நல்ல விடயம்” என்று தெரிவித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் லைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு –

“இந்தியாவில் இருந்து வந்த அனைத்து பொருட்களையும் ஜே.வி.பியினர் அன்று புறக்கணித்தனர். கொத்தமல்லி விற்பனை செய்தவர்களைக்கூட கொலை செய்தனர். எனவே, ஜே.வி.பியினர் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை வரவேற்கின்றோம்.

இந்தியா எமது அயல் நாடு. அந்நாட்டுடன் துப்பாக்கி ஏந்தி பேச்சு நடத்தாமல், பேச்சு மூலம் பிரச்னைகளை தீர்க்க முற்படுவது வரவேற்ககூடிய விடயமாகும்” என்றார்.