தமிழர் தாயகம் தொடக்கம் ஜெனீவா வரையிலும் நினைவுகூரப்படும் தியாகி திலீபன்

தியாக தீபன் திலீபனின் 36 ஆவது நினைவு தினம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிச்சென்ற நினைவு ஊர்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) திருமலையில் வைத்து இலங்கை காவல்துறையினரின் முன்பாக சிங்கள வன்முறையாளர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியா, கனடா உட்பட மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கை அரசின் வன்முறைக்கு  எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த போராட்டங்களின் போது அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைப்பட்டிருந்தது. இலங்கை அரசின் காவல்துறையினரின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்டஇந்த தாக்குதல் பின்வரும் செய்திகளை இந்த உலகிற்கு கூறி நிற்கின்றது:

  • போரில்இறந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கான அடிப்டை உரிமைகள் கூட தமிழ் மக்களுக்கு இல்லை
  • தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக செயற்படுவதற்கான சூழ்நிலைகள் இலங்கையில் இல்லை
  • தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை அரசோ அல்லது காவல்துறையினரோ முன்வரவில்லை
  • தமிழ் மக்கள் அகிம்சை வழியில் அமைதியாக தமது கோரிக்கைகளை சொல்வதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் ஒத்துழைப்புக்களுடன் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இந்த வன்முறையை உலக நாடுகள் கண்டிக்க முன்வரவேண்டும்.

thileepan தமிழர் தாயகம் தொடக்கம் ஜெனீவா வரையிலும் நினைவுகூரப்படும் தியாகி திலீபன்இலங்கையில் தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்.

இலங்கையின் அரச பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு அனைத்துலக சமூகம் காலம் தாமதிக்காமல் தமது நடைவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இதன் மூலம் மீண்டும் ஒரு இனப்படுகொலையை அவர்களால் இலங்கையில் தடுக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ முன்னர் விட்ட தவறுகளை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையை காப்பாற்ற அவர்கள் விரைந்து முன்வரவேண்டும் என்றும் அதன் மூலம் தமிழ் மக்களை மீண்டும் ஒரு இனஅழிப்பில் இருந்து அவர்களால் காப்பாற்ற முடியும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட  அமைப்புக்கள் தமது கோரிக்கைகளில் தெரிவித்திருந்தனர். இதனிடையே கடந்த திங்கட்கிழமை (18) சுவிஸ், ஜெனிவா, ஐ. நா ஈகைப்பேரொளிமுருகாதசன் திடலில் நடைபெற்ற கவனயீர்ப்புபோராட்டத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்துஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையைசர்வதேசத்திடம் எழுப்பியிருந்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்நடைபெற்றுவரும் நிலையில், தமிழின அழிப்பினைமேற்கொண்ட சிங்களப்பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றப் பொறிமுறையூடானநீதியினையும் தமிழர்களுக்குதமிழீழமே இறுதியானதீர்வு என்பதனையும் வலியுறுத்தி, சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் போது தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் நினைவு நிகழ்வும் இடம்பெற்றது.