தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி நாம் யாா் என்பதைக் காட்ட இதுதான் சந்தா்ப்பம் – சிறீதரன் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமத்துகின்றன. யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை கதைக்கவில்லை.

தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய்சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம். 

எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கி பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம். ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுவேட்பாளர்” என்றும் சிறீதரன் தெரிவித்தாா்.