திருகோணமலையில் மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் ” மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் ” தொடர்பான இரண்டாம் கட்ட செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தலைமையில்  நேற்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Trinco student திருகோணமலையில் மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம்2024 ஆம் ஆண்டு பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய முன்னாயத்த திட்டங்களை உருவாக்குவது தொடர்பாகவும் மற்றும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற மூன்று துறைகளுக்குரிய செயலமர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் எவ்வாறு பெற்றுக்கொள்ளல், மாணவர் தலைவர்கள் தமக்கான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளும் விதம், பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான  பல்வேறுபட்ட விடயங்கள் இதன் போது மாணவர்களின் மத்தியில் தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத், மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் நளினி, வைத்தியர் முபீஸ் ஹனிபா மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.