திருமலை ஸாஹிராவில் 70 மாணவிகளுக்கு பெறுபேறு வெளியாகவில்லை – திட்டமிட்ட செயலா?

IMG 20240603 WA0017 திருமலை ஸாஹிராவில் 70 மாணவிகளுக்கு பெறுபேறு வெளியாகவில்லை - திட்டமிட்ட செயலா?அண்மையில் வெளியான கா.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகியதில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களில் 70 மாணவிகளுக்கு பரீட்சை பெறுபேறு வெளியாகவில்லை இதை திட்டமிட்டு செய்துள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இவ் விடயம் தொடர்பில் சாஹிரா கல்லூரியின் அதிபர் முகைஸ் அவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மாணவர்களின் பரீட்சை பெறு பெறுகள் தொடர்பாக கலந்துரையாடிய போது பரீட்சை மண்டபத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகள் சென்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொருப்பதிகாரி மீதும் ,மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை தொடர்பாகவும் பாரிய ஒரு சந்தேகத்தை எமக்கு உருவாக்கி உள்ளன.

தொடர்ந்து கடந்த 10 வருட காலமாக குறைந்த பட்சம் 10த்துக்கும் மேட் பட்டவர்கள் மருத்துவ துறையிலும், பொறியியல் துறையிலும் திருகோணமலை நகரத்தில் பலமை வாய்ந்த பாடசாலைகளை விட திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபெறுகள் அப் பிரதேசத்தில் காழ்ப் புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக வே அமையப்பெற்று இருக்கின்றது.

70 மாணவிகளின் பரீட்சை பெறு பேறுகள் தடை செய்யப்பட்ட நிலையில் நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பதும் இப் பெறுபேறுகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் 9 க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதனையும் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் எதிர் பார்த்து காத்திருக்கும் நிலை கசிந்துள்ளது. கல்வி தினைக்களத்தால் 22, 04.2024ம் திகதி இடப்பட்ட அதிபருக்கும் 70 மாணவிகளுக்கும் 25.04.2024ம் திகதி வியாழன் முற்பகல் கல்வி தினைக்கள (விசாரனை) குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட போது மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்து கொண்ட விதம் தொடர்பாக மாணவிகள் அவர் மீதான குற்றச்சாற்றுக்களை விசாரனை குழுவுக்கு முன்வைத்துள்ளார்கள்.

குறிப்பாக பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பரீட்சாத்திகளுக்கு சாப்பிடுவதற்கு கச்சான் கொட்டை வழங்கியமையயும் பர்தாவும் துப்பட்டாவும் அணிந்து கொண்ட அனைவருக்கும் பரீட்சை பெறு பேறுகள் வரது என்பதனையும் பல சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை எழுதி கொண்டு இருந்த போது பரீட்சை மேலதிக பொருப்பதிகாரி ஊறி வந்ததையும் இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகளின் மனநிலை பாதிக்க பட்டிருந்ததாகவும் கல்வி திணைக்கள சட்ட நடவடிக்கை குழுவுக்கு முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்கள் இதை வேலை கல்வி திணைக்கள விசாரனை குழுவினர் ஒவ்வொரு மாணவியரும் அவர்களின் வாக்கு மூலங்களை எழுதுவதற்கு முன்னர் திருகோணமலை வலயக் கல்வி பணிமனையை சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுத சொன்னார்கள் அதன் பின்னர் வாக்கு மூலம் எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட நிலையில் வலயக் கல்வி பணிமனையை சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுத சொல்லி மாணவிகளை பணித்திரிக்கிறார்கள் பின்னர் ஒவ்வொருவரும் சுயமாக எழுத்து மூலம் தந்திரிக்கிறீர்கள் இதில் சிலருக்கு பரீட்சை பெறு பேறுகள் வராது என்றும் கூறி இருக்கிறார்கள் இது அந்த மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே கருது கின்றோம்.

முதல் நாளில் 70 மாணவிகளுக்கும் பொருப்பதிகாரி இருவரும் அவர்களின் காதுகலையும், துப்பட்டாவினை விளக்கி காட்டுமாறு கூறிய போது மாணவிகள் அதனை செய்து விட்டு பரீட்சை எழுதி இருக்கிறார்கள் ஐந்து பாடங்களின் பரீட்சை முடியும் வரை மூதூரை சேர்ந்த மேலதிக பொருப்பதிகாரி உங்கள் எவருக்கும் பரீட்சை பெறு பேறுகள் வராது என்பதனை முன் கூட்டியே கூறி வந்திரிக்கிறார் அதே போன்றே 31.05.2024 பெறு பேறுகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றது கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் நடை பெற்ற விசரனை ஒரு கண் துடைப்பாகவே கருத வேண்டி இருக்கிறது.

ஏற்கனவே திருகோணமலை மாவட்ட அபாயா பர்தா பிரச்சினை நீதி மன்றத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் தற்போழுது மாணவிகளின் பெறுபேறுகள் தொடர்பில் பல்வேறு பெயர்களில் இன வாதத்தை கக்கும் தன்னை தமிழ் இனவாதி பகிரங்கமாக கூறுகின்ற ஒருவர் ஊடகங்களையும் ஊடகவியளாலரையும் தூண்டுகின்ற விதத்தில் ஸாஹிரா கல்லூரியின் மீதும் மாணவிகளின் நட் பெயருக்கும் கழங்கம் செய்யும் நடவடிக்க வை பதிவிட்டு வருகின்றார்கள் அச் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனை தடுத்து நிருத்த வேண்டும் இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உறுப்பினர் ரிசாட் பதுர்தீன் அவர்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த அவர்களையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து 70 மாணவிகளின் பெறு பெறுகளை வெளி கொண்டுவர முயற்சி செய்து வருகின்றார் இவ் முயற்ச்சி வெற்றி பெற இறைவனை பிராத்திப்போமாக என்றார்.