தீவகத்தின் பிரச்னைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிட்டும் – யாழில் எரான் விக்ரமரத்ன தெரிவிப்பு

eran தீவகத்தின் பிரச்னைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிட்டும் - யாழில் எரான் விக்ரமரத்ன தெரிவிப்புஇந்த ஆட்சியிலும் தீவக மக்களின் தண்ணீர் பிரச்னை தொடர்கிறது. ஊர்காவற்றுறையை கடப்பதற்கு நீண்ட நேரம் செல்கின்றது. எமது ஆட்சியின்போது இவை சரி செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவற்றைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில், யுத்தம் நடைபெற்ற இந்தப் பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை – நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போம்.

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் முதல் கட்டமாக மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இப்போது ஏகாதிபத்திய அரசு இருக்கிறது. ஜனாதிபதியின் கையில் அதிகாரம் உள்ளது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் நடைமுறைப்படுத்துவதாக அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கூறியுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு 35 வருடங்கள் எடுத்துள்ளன.

கடந்த தேர்தலில் சஜித்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், சிங்கள மக்களின் வாக்கோடு கோட்டாபய ஆட்சிக்கு வந்தார். எமது தலைவர் சஜித் பிரேமதாஸ அதற்கு ஆதரவாக அன்றி அனைத்து இனங்களுடனும் மதங்களுடனும் இணைந்தே செயல்படுவார்” என்றார்.