தேர்தலைப் பிற்போட்டு ஆட்சியில் தொடர்வதற்கு அரசாங்கம் திட்டம் – குற்றஞ்சாட்டுகின்றார் ஜீ.எல் பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட்டு தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஜனாதிபதி இந்த வாரத்திற்கு பாராளுமன்றத்தை கலைப்பாராயின் 52 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பொதுத்தேர்தலை நடத்தி அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் உள்ளது. இரண்டு தேர்தல்களையம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன.

மக்களை ஏமாற்றி வாக்கினை பெறமுடியுமென எவரேனும் நினைத்தால் அது வெறும் கனவாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.