தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் – பொலிஸ் மா அதிபா் உறுதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை செய்யும் முகமாக பொலிஸார், தபால் திணைக்களம் மற்றும் அரச அச்சக பணிப்பாளருடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைகுழுக்குவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தபால் திணைக்களத்தில் ஆணைளாளர், பிரதி ஆணையாளர் மற்றும் அரச அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அதன்போது பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட கோரிக்கை அவர் ஏற்றுக்கொண்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் ஊடாக பகிர்ந்தளிக்க வேண்டிய கடிதங்கள் மற்றும் ஏனைய விடயங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்களை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகத்துக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சகத்தின் பணிப்பாளர் நாயகமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ள பின்புலத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.