நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை மரணம் பதிவாகிறது: சுற்றுச்சூழல் ஆர்வலர்

இலங்கையில் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை நாட்டில் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் பள்ளம் தோண்டுவதற்கான டெண்டர் பெறும் நோக்கில் வனப் பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டு, மண் விற்பனை செய்யப்பட்டது. பள்ளம் தோண்டுதல் என்ற போர்வையில் ஏராளமான வனவிலங்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. யானைகள், அவற்றில் விழுந்து வலியால் அவதிப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த குழிகள் குறைந்தது 10 அடி ஆழமும் குறைந்தது ஐந்து அடி அகலமும் கொண்டவை. அவை வன நிலங்களின் எல்லைகளில் தோண்டப்பட்டுள்ளன.

இந்த குழிகளில் பெரும்பாலானவை கோட்டாபய ராஜபக்ச காலத்தில் தோண்டப்பட்டவை எனவும், எமது சங்கம் அந்த செயற்பாடுகளுக்கு எதிரானது எனவும், அவற்றின் பாதகங்களை சுட்டிக்காட்டியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேலும் தெரிவித்துள்ளார்.