நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விடுக்கப்பட்ட தடை நீதிமன்றினால் நீக்கம்

IMG 20240517 WA0058 நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விடுக்கப்பட்ட தடை நீதிமன்றினால் நீக்கம்கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து கல்முனை நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம் எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு மீள் நகர்த்தல் (மோஷன்) முறை மூலம் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித், ரி.மதிவதனன், றிபாஸ் ஆகியோர் இதனை மீள் தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்ற நீதிவான் சம்சுதீன்விசாரணை செய்து பரிசீலனைக்கு உட்படுத்தினார்.

பெரியநீலாவணை போலீஸ் பொறுப்பதிகாரி வாதங்களை முன் வைத்தார். அதற்கு எதிராக சட்டத்தரணிகளான நடராஜா சிவரங்சித் ரி.மதிவதனன் மற்றும் றிபாஸ் ஆகியோர் தலையிட்டு நியாயமான வாதங்களை முன் வைத்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்சுதீன் பொதுமக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராத வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதாகைகளை சின்னங்களை காட்சிப்படுத்தாமல் தங்களது மரணித்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாரும் தடை செய்ய முடியாது இந்த வகையில் நியாயமாக இந்த நினைவேந்தலை செய்யலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கல்முனை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த ஐவருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றினால் தடையுத்தரவு 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையான காலப்பகுதிக்கு நினைவேந்தலை நடாத்துவதற்கு இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சமுக செயற்பாட்டாளர்களான பாண்டிருப்பு தாமோதரம் பிரதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் , காரைதீவு வினாயகம் விமலநாதன் மற்றும் திருக்கோவில் த.செல்வராணி ஆகியோருக்கு இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் காரைதீவு வினாயகம் விமலநாதன் ஆகியோர்
நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தனர்.

விசாரணையின் போது இருதரப்பினரினதும் வாதப் பிரதி வாதங்களை அவதானித்த நீதிவான் பொதுமக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராத வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுச்சின்னங்களை காட்சிப் படுத்தாமலும் நினைவேந்தலை கஞ்சி வழங்கலை மேற்கொள்ளலாம். அதற்கு பொலிசார் தடைவிதிக்க கூடாது என்றும் கூறப்பட்டது.

வழக்கு முடிந்த பிறகு சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் விளக்கம் அளித்தார். முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் ஜெயசிறில் கூறுகையில்..

போலீசாரினால் எங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளிளை நினைவு கூறுவதாகவும் தமிழ் மக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் நிகழ்வு ஏற்பாடு செய்ததாகவும் குற்றம் சுமத்தி விடயங்களை எடுத்துக் கூறியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து எமது சார்பிலே ஆஜராகிய சட்டத்தரணி சிவரஞ்சித் 2009 ஆம் ஆண்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக அம்பாரை மாவட்டம்பூராக அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அஞ்சலி செலுத்துவது அவர்களுடைய உரிமையும் கடமையும் ஆகும். பொய்யான குற்றச்சாட்டுகளை சாட்டப்பட்டிருக்கின்ற இவர்களை விடுவித்து அதற்காக அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் நீதிபதியவர்களிடம் எமது சட்டத்தரணி கோரிக்கை விவாதங்களை முன் வைத்திருந்தார்.

அதன்போது நீதிபதி அவர்கள் உடனடியாக வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவதாக ஒத்தி வைத்திருந்தார் பிற்பாடு ஒரு மணி நேரம் கடந்ததுக்கு பிற்பாடு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது பெரிய நீலாவணை போலீஸ் அதிகாரி குறித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு கூறுவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஞாபகம் ஊட்டி உணர்ச்சி விடயங்களை செய்வதாகவும் பாதையிலே இந்த விடயங்களை செய்து பொதுமக்களுக்கு இடையூறு வருவதாகவும் இதனால் பல கலவரங்களும் பல பிரச்சனைகளும் வரக்கூடும். அதனல போலிஸினால் அதை கட்டுப்படுத்த முடியாது போகலாம் என்ற விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதன் போது எங்களுடைய சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் தலைமையிலான குழுவினர் வாதிட்டனர்.

இதேபோல் நினைவேந்தலை ஜேவிபியினர் கொழும்பில் செய்கின்றார்கள். அதேபோன்று ஜனாதிபதி அவர்கள் இந்த நினைவேந்தல் அவர்களுடைய உரிமை என்ற விடயத்தை கூறி இருக்கின்றார் .பல்வேறு நீதிமன்றத்தில் இவ்வாறு தடையுத்தரவு விலக்கி அனுமதிக்கப்பட்டிருக்கின்றது .

மூதூரிலும் அது நடந்திருக்கின்றது. ஆகையால் இவர்கள் மனிதாபிமான முறைப்படியிலே இவர்கள் அந்த நினைவு தினத்தை அனுஷ்டிக்கு வருகின்றார்கள் வழமையாக காரை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழர் கட்சி தலைவரும் அம்பாறை மாவட்ட கட்சியின் முக்கியமானவர்தான் ஜெயசிறில். இவர் பரவலாக அனைத்து இடங்களிலும் செய்ய முடியும் . அவர் சமூக சேவையிலும் பல செயற்பாடுகளிலும் செய்து வருகின்றார் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்ட ஒரு முக்கியமான நபராக இருக்கின்றார் ஆகையால் அவருக்கு இந்த அனுமதியை வழங்க வேண்டும் என்று மன்றிலே கேட்டுக்கொண்டார் .

போலீசார் பல குற்றச்சாட்டுகளை உங்களுக்கு முன் வைத்தே இந்த தடையுத்தரவை எடுத்திருக்கின்றார்கள். ஆகையால் கௌரவ நீதிபதி அவர்கள் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு இணங்க நீதிபதி அவர்கள் இறுக்கமான கட்டளை பிறப்பித்தார்.பாதைகளுக்கு இடைஞ்சல் விளைவிக்காது தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் பதாதைகள் இல்லாதது அமைதியான முறையிலே மக்களுக்கு பிரச்சினை வராதவாறு செய்யலாம் என்று விடயத்தை கூறி இவர்கள் அதனைமீறி பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக பொலிசார் கைது செய்து மன்றுக்கு கொண்டுவர முடியும் .

மனிதாபிமான செயல்பாட்டிற்கு நாங்கள் அனுமதி வழங்கியாக வேண்டும் அதேபோன்று நீங்களே அதை கவனமான முறையிலே எந்த பிளவுகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கி இருந்தார். இதேபோல் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திலும் இவ்வாறு விதிக்கப்பட்ட தடையுத்தரவு விலக்கி கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.