படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடு

“படிம எரிபொருள் யுகத்தின் முடிவின் ஆரம்பம்” (the beginning for the end for the fossil fuel era) என்று ஐக்கிய நாடுகளினால் முக்கியத்துவம் கொடுத்து வர்ணிக்கப்படுகின்ற, ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தத்தை, கொப் 28 (COP 28) என அழைக்கப்படுகின்ற பூகோள காலநிலை உச்சிமாநாடு (Global Climate Summit) தற்போது எட்டியிருக்கிறது.cop 28 2 படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடுஇருபத்து நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, தீவிரமான பேச்சுவார்த்தைகளின் பின்னர், எதிர்வரும் பத்து ஆண்டுகளில், எல்லாவிதமான எண்ணெய், நிலக்கரி, வாயு போன்றவற்றிலிருந்து படிப்படியாக விலகி, 2025ம் ஆண்டில் பூச்சிய நிலையை அடையும் நோக்குடன், ஒரு ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டிருக்கிறது. உண்மையில் குறிப்பிட்ட இந்த இலக்கில் இருந்து உலகம் மிகவும் தொலைவிலேயே இருக்கிறது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒரு விடயம் ஆகும்.புதன்கிழமை காலையில், துபாயில் நடைபெற்ற மாநாட்டின் இறுதி அமர்வில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை, ஆழமாக, விரைவாக, தொடர்ச்சியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும் அங்கு வலியுறுத்தப்பட்டது.ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்ற, கொப்28 மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய, சுல்தான் அல் ஜாபர் (Sultan Ahmed al-Jaber) , பாரம்பரிய முறையில் சம்மட்டியைத் தட்டி, ஒப்பந்தம் எட்டப்பட்ட தருணத்தைப் பகிரங்கமாக அறிவிக்க, மாநாட்டில் ஒன்றுகூடியிருந்த பிரநிதிகள் அனைவருமே தமது இருக்கைகளை விட்டு எழுந்து, கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தது மட்டுமன்றி, மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித்தழுவிய காட்சியையும் கண்ணாரக் காணக்கூடியதாகவிருந்தது. அதே நேரம் ஒருசில நாடுகள் நடுவே, ஒப்பந்தம் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் நிலவியதையும் அவதானிக்க முடிந்தது. சிறிய தீவுகளைக் கொண்ட இவ்வாறான நாடுகள் குறிப்பிட்ட ஒப்பந்தம் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகக் கருத்துத் தெரிவித்தனர்.• 2030ம் ஆண்டளவில் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை உலகளாவிய வகையில் 3 மடங்காக அதிகரித்தல்• நிலக்கரிப் பயன்பாட்டைக் கட்டம் கட்டமாகக் குறைத்து, புதிய மற்றும் கட்டுப்பாடற்று இயங்கும் நிலக்கரியால் இயக்கப்படும் மின் நிலையங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல்• நீதியான, ஒழுங்குசீரான, சமத்துவமான வகையில், படிம எரிபொருளிலிருந்து படிப்படியாக விலகி, 2050 இல் பூச்சியம் என்ற இலக்கை எட்டுதல்• காபனீரொட்சைட்டு அல்லாத, குறிப்பாக மீதேன் போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை 2030ம் ஆண்டளவில், கணிசமான அளவு குறைத்துக்கொள்ளல்போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்வதாக பரபரப்பான அந்த நாளில், மாநாட்டுப்பிரதிநிதிகள், சம்மதம் தெரிவித்தார்கள்.‘ஐக்கிய அரபு எமீரகத்தில் அடையப்பெற்ற ஒருமித்த கருத்து’ என்று ஒப்பந்தத்தை அழைத்த  மாநாட்டு அதிபர், அவ்வாறான திட்டம் விஞ்ஞானத்தினால் வழிநடத்தப்பட்டது என்றும், 2015 இல் பாரிஸ் மாநாட்டின் இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தது என்றும் தெரிவித்தார்.cop 28 4 படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடுவரலாற்றில், முதல் தடவையாக, ‘படிம எரிபொருள்’ போன்ற சொற்றொடர் எமது ஒப்பந்தத்தின் இறுதிப் பதிப்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளராகிய திரு. ஜாபர் சுட்டிக்காட்டினார்.மானிட சமூகத்தின் அடிப்படை காலநிலை தொடர்பான  பிரச்சினையாகிய படிம எரிபொருள், மற்றும் பூகோளத்தை எரிக்கும் அளவுக்கு அதிகரித்துவிட்ட அதன் மாசுபடுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக, காத்திரமான ஒரு சமிக்ஞையைக் கொடுக்க வேண்டிய தேவை, கொப் 28 மாநாட்டுக்கு இருந்தது என்று காலநிலைக்கான செயரலாகப் பணிபுரிகின்ற சைமன் ஸ்ரியெலின் (Simon Stiell) கூற்றுடன் ஐக்கிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நகர்வை வரவேற்றது.படிம எரிபொருள் தொடர்பாக துபாயில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாத போதிலும், “இங்கு அடையப்பட்டது ஒரு முடிவின் தொடக்கம்” என்று அவர் கூறினார். இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டவுடன் மசகு எண்ணெயின் விலையில் சரிவு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் உள்ளடக்கப்பட்ட மொழிநடை, முன்னரைவிடப் பலமானதாக இருந்தது. காரணம் அதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வடிவத்தில் படிம எரிபொருளை ‘படிப்படியாகக் குறைத்தல்’ என்னும் சொற்றொடர் தவிர்க்கப்பட்டிருந்தது. “இந்த மாற்றத்தை நோக்கி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற தமது பங்கு முக்கியமாக அமைந்தது” என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் உரிமைகோரியிருந்தன.படிம எரிபொருளைப் ‘படிப்படியாகக் குறைத்தல்’ என்ற சொற்றொடரை எதிர்த்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமான அந்தோனியோ குத்தெரேசிடமிருந்து (Antonio Guterres) கடுமையான ஒரு செய்தி காத்திருந்தது. சவூதி அரேபியா, ஈராக், ரஷ்யா, ஓபெக் உறுப்பினர்கள், மற்றும் பெற்றோலியத்தை அதிகமாகக் கொண்ட நாடுகள் இவ்வாறான சொற்பதங்களை எதிர்த்ததாகச் சொல்லப்பட்டது.“நீங்கள் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன, படிம எரிபொருளைக் கட்டங்கட்டமாகக் குறைப்பது தவிர்க்க முடியாதது”  என்று  செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.படிம எரிபொருள் தொடர்பான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எட்டப்பட்டிருந்த போதிலும், பலர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏமாற்ற உணர்வை அனுபவித்ததை அவதானிக்க முடிந்தது. அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற சிறிய தீவுகளின் கூட்டணி உட்பட, 100க்கு மேற்பட்ட நாடுகளும் (படிம எரிபொருள்) படிப்படியாகக் குறைக்கப்படவேண்டும் என்ற சொற்றொடர் உள்வாங்கப்படவேண்டும் எனக் கோரியிருந்தன. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கவில்லை என்றும் நடந்த விடயங்கள் தொடர்பாகக் குழப்பமடைந்திருப்பதாகவும் சமோவா நாட்டின் பிரதிநிதியான ஆன் ராஸ்முசன் (Anne Rasmussen) தெரிவித்தார்.குறிப்பிட்ட ஆவணத்தில் பல பலவீனங்கள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டதோடு “இந்தச் செயற்பாட்டால் நாங்கள் கைவிடப்பட்டிருக்கிறோம்” என்று றாஸ்முஸன் மேலும் தெரிவித்தார். படிம எரிபொருள் தொடர்பான அறிவித்தலை விட றாஸ்முசனது கூற்றுக்கு சபையினர் எழுந்து நின்று பாராட்டுதல் தெரிவித்திருந்தனர்.cop 28 3 படிம எரிபொருள் (fossil fuel) தொடர்பாக காத்திரமான முடிவை எட்டிய துபாய் காலநிலை மாநாடுஎட்டப்பட்ட ஒப்பந்தந்தைக் கரகோசம் செய்து பாராட்டியவர்களுடன் இணைந்துகொள்ளாத ஜாபர், சிறிய தீவுகளின் கூட்டணியின் கருத்து, பதிவில் சேர்க்கப்படும் என்று கூறினார். பசுமையைப் பேணும் நாடுகளிலிருந்து எண்ணெய் வளமான நாடுகள் வரை, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவருமே துபாய் ஒப்பந்தத்தைப் பாராட்டினர். ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு எல்லா நாடுகளின் சம்மதமும் அவசியமாக இருந்தது என்பது ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டது. அதே நேரம் பலவீனமான நாடுகளைப் பாதுகாக்க இன்னும் அதிகமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் அங்கு பலமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.இந்த நிலையை அடைவதற்குப் பங்குபற்றிய பிரதிநிதிகள், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நேரத்திலிருந்து மேலதிகமாகப் 18 மணித்தியாலங்கள் அந்த இலக்கை அடைய அவசியமாக இருந்தன. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வடிவத்தின் மிகவும் பலவீனமான மொழிநடை காரணமாக, திங்கட்கிழமை அதற்கு எதிராக மிகவும் கடுமையான எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்டிருந்தது.“தூய்மையான சக்திக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அவற்றின் ஒவ்வொரு படிநிலையிலும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்” என்று காலநிலைக்கான அமெரிக்காவின் விசேட தூதுவரான ஜோண் கெறி தெரிவித்தார்.ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரியான றிஷி சுணக்கின் றுவாண்டா சட்டமூலத்தை ஆதரிக்க இலண்டன் சென்று மீண்டும் கொப் 28 மாநாட்டுக்குத் திரும்புவதற்காக 7000 மைல்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த, காலநிலை அமைச்சரான கிரஹாம் ஸ்ரூவாட் (Graham Steuart) பூகோள வெப்பநிலையை 1.5 சென்ரிகிரேட் ஆகப் பேணுவதை ‘வட துருவ நட்சத்திரம்’ என்று அழைத்தார்.மாநாட்டின் முதல் நாளன்று தாபிக்கப்பட்ட ‘இழப்பு மற்றும் சேதாரநிதி’  காலங்கடந்ததொன்று என்று அவர் தெரிவித்திருந்தார். அதே நேரம் கொப் 28 மாநாட்டில் ஐக்கிய இராச்சியம் பரப்புரை செய்த நிலக்கரி தொடர்பான விடயங்கள் குறிப்பிட்ட ஆவணத்தில் உள்வாங்கப்படாதது தொடர்பாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.“எங்களுக்கு விருப்பமில்லாத விடயங்கள் சில இங்கு இருக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.1.5 சென்ரிகிரேட் என்ற இலக்கை அடைவதற்காக, சமோவா (Samoa) மற்றும் மாஷல் தீவுகள் (Marshall Islands) போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, அந்தக் குழுவினர் படிம எரிபொருளைப் படிப்படியாகக் குறைக்க முன்வந்திருக்கின்றார்கள் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய ஜேர்மானிய காலநிலை அமைச்சரான, அன்னலேனா பேயர்பொக் (Annalena Baerbock) அந்தக் குழுவினரைப் பாராட்டினார்.“உங்களை நாங்கள் பார்க்கிறோம். நீங்கள் உணரும் உணர்வுகளை நாங்களும் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் போதாது என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.”“காலநிலை நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக நாம் தொடங்கியிருக்கும் பயணத்தை, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னெடுக்கிறோம்.”தமிழில்: ஜெயந்திரன்நன்றி: www.independent.co.uk