பிராந்தியப் போராக விரிவடையும் இஸ்ரேல் – பாலஸ்த்தீன போர் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

புதிய ஆண்டில் மிகப்பெரும் போர் ஒன்று மத்தியகிழக்கில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகி வருகின்றன. காசா மீது தாக்குதலை மேற்கொண்டுவந்த இஸ்ரேல் தற்போது லெபனான் நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது.

காசாவில் எற்பட்டுவரும் இழப்புக்களுக்கு லெபனானனின் ஆயுத உதவிகளும், மற்றும் இஸ்ரேல் மீதான தொடர் தாக்குதலும் தான் காரணம் என அறிந்த இஸ்ரேல் கடந்த வாரம் தனது இரண்டு படையணிகளை வடக்கு காசாவில் இருந்து நகர்த்தியிருந்தது.

Gaza 01 2024 பிராந்தியப் போராக விரிவடையும் இஸ்ரேல் - பாலஸ்த்தீன போர் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்தற்போது அந்த அணிகள் லெபனானின் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. ஹிஸ்புல்லாக்கள் பலமாக இருக்கும் வரையில் தம்மால் ஹாமாஸை வீழ்த்த முடியாது என இஸ்ரேல் உணர்ந்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த போர் தொடர்வதால் ஏற்பட்டுவரும் படைத்துறை பொருளாதார மற்றும் ஆளணி இழப்புக்களை இஸ்ரேல் சமாளிக்க முடியாத நிலை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. தனது பாதுகாப்புக்கு 58 பில்லியன்களை ஒதுக்கியுள்ளது இஸ்ரேல் இது அதன் மொத்த உற்பத்தியில் 25 விகிதமாகும்.

மறுவளமாக செங்கடலின் ஊடான கப்பல் போக்குவரத்தின் பாதிப்பு, உல்லாசத்துறையின் வீழ்ச்சி என்பன இஸ்ரேலை கடும் ஆழத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காசா மீதான தாக்குதலில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதற்கு அனைத்துலக ரீதியில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இனஅழிப்பு குற்றம் என்ற வழக்கை இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா கடந்த வாரம் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதந்த வழக்கு எதிர்வரும் 11 ஆம் நாள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் தற்போது மலேசியாவும் அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை லெபனானின் தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்குப் புறம் உள்ள நகரில் அமைந்திருந்த ஹமாசின் அரசியல்த்துறை அலுவலகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அளில்லாத தாக்குதல் விமானத்தின் தாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவர் அருறி மற்றும் லெபனான் பிரிவிக்கான அல்குசாம் பிரிகேட்டின் கட்டளை அதிகாரி, அல்குசாம் பிரிகேட்டின் வடக்கு காசா பிரிவிற்கான துணைத்தளபதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஏறத்தாள 110 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 170 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் இரானின் காட் படைப்பிரிவு எனப்படும் வெளியக புலனாய்வு அமைப்பின் கட்டளை அதிகாரி ஜெனரல் சொலமானி; கொல்லப்பட்ட நினைவு தினத்தில் இடம்பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி சொலமானி ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்ட சமயம் விமானநிலையத்தில் இருந்து இறங்கி செல்லும்போது அமெரிக்காவின் எம்.கியூ-9 ஆளில்லாத தாக்குதல் விமானத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

அவரின் நினைவுதினத்தில் ஹாமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் கொல்லப்பட்டதுடன், சொலமானியின் நினைவிடத்தில் வெடித்த இரண்டு குண்டுகளனால் 100 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 170 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

Iran பிராந்தியப் போராக விரிவடையும் இஸ்ரேல் - பாலஸ்த்தீன போர் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்றிமோட் கொன்றோல் மூலம் இயக்கப்படும் குண்டுகளே அங்கு வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ள அமெரிக்காவின் வெளிவிவகார செயலகம், இஸ்ரேலுக்கும் அதில் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் மறுவளமாக ரஸ்யா, ஐ.நாவின் பொதுச் செயலாளா ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் ஈரானுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என ஈரானின் அதிபர் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது நாட்டின் இறைமை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வியாழக்கிழமை(4) ஈராக்கில் உள்ள ஈராக்கின் உள்த்துறை அமைச்சகத்தின் கட்டிடத் தொகுதியில் உள்ள பி.எம்.யு என்ற அமைப்பின் தலைமையகம் மீது அமெரிக்காவின் ஆளில்லாத தாக்குதல் விமானம் மேற்கொண்ட தாக்குதலில் ஈராக்கின் தலைநகரமான பக்தாத் பெல்ட் நடவடிக்கை பிரிவின் துணைத்தளபதி அபு தக்வாவும், மற்றுமொரு கட்டளை அதிகாரியும் கொல்லப்பட்டதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Iraq US attack பிராந்தியப் போராக விரிவடையும் இஸ்ரேல் - பாலஸ்த்தீன போர் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்ஒரு வாரத்திற்கு முன்னர் சிரியாவின் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த படைத்துறை ஆலோசகரான ஜெனரல் தர அதிகாரி கொல்லப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், செங்கடல் பகுதியில் ஈரான் தனது டிஸ்ரோயர் கடற்படைக் கப்பலை இறக்கியுள்ளது. ஈரானின் கடற்படையினர் வரவைத் தொடர்ந்து தனது மிகப்பெரும் விமானந்தாங்கி கப்பலான ஜெரால்ட் போர்ட்டை அந்த பகுதியில் இருந்து அமெரிக்கா நகர்த்தியுள்ளது. எனினும் இற்றுமொரு விமானந்தாங்கி கப்பலான எசன்கொவர் அந்த பகுதியில் தரித்து நிற்கின்றது.

22 நாடுகளை கொண்ட கடற்படையின் கூட்டணியினர் செங்கடல் பகுதியில் தாம் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் லெபனானில் இருந்து தமது மக்களை உடனடியாக வெளியேறுமாறு கனடா, சுவீடன் மற்றும் ஜேர்மனி உட்படப பல நாடுகள் அவசர அறிவிப்பை விடுத்துள்ளன.

பிரந்திய மோதல்கள் ஏற்படக்கூடாது என மேற்குலகம் விரும்பியபோதும், உக்ரைன் போரைப் போல போர் அவர்களின் கைகளை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றது. அதாவது இந்த வருடத்தின் முதல் 3 நாட்களுமே மிகப்பெரும் அனர்த்தங்களுடன் தான் நகர்ந்துள்ளன.

நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது உலகம் 3 ஆவது உலகப்போரை நோக்கி மெல்ல மெல்ல நகர்வது மட்டும் தௌவாகின்றது.