புதிய அரசமைப்பு யோசனைகளை கூட்டணி தனியாகவே சமர்ப்பிக்கும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைபை அரசமைப்புக்கான நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கும் என்று அந்தக் கூட்டணியின் இணைத் தலைவர் சுரேஷ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரைபு தமிழ் மக்கள் பேரவை, வட மாகாண சபை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டங்களையும், சி.வி.விக்னேஸ்வரனால் தயாரிக்கப்படும் வரைபையும் மற்றும் பங்காளிக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் ஒன்றிணைத்து மேம்பட்டதாக இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசமைப்பு யோசனைகளை தயாரிக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா கூறியிருந்தார். ஆனால், இதுவரை அதுபற்றி கலந்துரையாடப்படவில்லை.

அரசமைப்ப யோசனைகளை வழங்குவதற்கு குறுகியகாலமே இருப்பதால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தனது யோசதனைகள் அடங்கிய அரசமைப்பு வரைபை தனியாகவே வழங்கும்” என்றார்.