புதிய சிங்கள இனவாத அரசியல் கூட்டணியின் முதலாவது கூட்டம் நுகோகொடையில் நேற்று

1 1 புதிய சிங்கள இனவாத அரசியல் கூட்டணியின் முதலாவது கூட்டம் நுகோகொடையில் நேற்றுபிரபல வர்த்தகர் திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள “சர்வ ஜன பலய” அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நுகேகொட நகரில் நடைபெற்றது.

“69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை மீண்டும் பலப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி உறுப்பினர்களும் உதய கம்மன்பில தலைமையில் பிவித்துரு ஹெல உறுமய உறுப்பினர்களும், விமல் வீரவன்ச தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களும், வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி உறுப்பினர்களும் மற்றும் வேறு சில கட்சிகளின் உறுப்பினர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணியாக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர்.

இதனைத் தொடா்ந்து ஆனந்த சமரகோன் திறந்த அரங்கில் கூட்டம் ஆரம்பமானது. இதில் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென்ற பெயரில் ராஜபக்ஷக்களை மீண்டும் பலப்படுத்திய முதலாவது கூட்டம் நுகேகொட நகரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனை போன்றே இந்த புதிய கூட்டணியின் கூட்டமும்
நேற்று நடைபெற்றது.