புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா்

94 புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா்அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது.

இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும்
முகமாக கதை அமையப்பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.