பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்

e1 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் குறித்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் அண்மையில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மகளிர் , சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ்பெண் தலைமை தாங்கும் 10 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் சிறு கடை,கோழி வளர்ப்புக்கான உபகரணங்கள் என தெரிவுசெய்யப்பட்ட மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு கோழிக்கூடு கோழித்தீன் மருந்துகள் மற்றும் நாட்டுக்கோழிகளும் வழங்கப்பட்டன.

e2 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் e3 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் e4 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் e5 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் நாளாந்தம் தங்களது ஜீவனாம்சத்தை கொண்டு செல்லவும் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கணக்காளர் எஸ்.செல்வதாஸ்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,மகளிர்அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமிணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.