பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடு

01 பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடுஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வரலாறாகும்.

பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில் எவ்வாறு வந்து சேர்ந்தார்கள் என்பதை வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட சான்றுகள் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதை அறிவோம்.

02 பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடுதமிழர் தேசம் திட்டமிட்ட இனவழிப்பை எதிர் கொண்டு அதற்கெதிராக போராட வேண்டிய வரலாற்றை நோக்கிப் பயணித்த காலத்தில் தன்னெழுச்சியாக தன் தலைமையில் ஒரு விடுதலை இயக்கம் கட்டி போராடி வந்த திரு. க. வே. பாலகுமாரன் அவர்கள் காலத்தின் தேவை கருதி எமது தேசிய தலைவரையே தனது தலைவராக ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு இறுதிவரை களத்தில் நின்று தலைவரோடு தோள்நின்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினரும் ஆய்வாளருமான திரு. க. வே பாலகுமாரன் அவர்களது ஆக்கங்களின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இலண்டன் அல்ப்பேட்டன் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டது.

03 1 பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடுபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மேற்கு இலண்டன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு. கமல் அவர்கள் பொதுசுடரினை ஏற்றிவைத்தார்கள்.

தமிழீழத் தேசியக் கொடியினைபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் அணி பொறுப்பாளர் தேவதர்சினி தேவராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தாயக விடுதலைப் போரிலே வீரச்சாவினை தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அணியை சார்ந்த திருமதி மாதுமை லோகேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழக ஏற்பாட்டில் நடன ஆசிரியர் திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளாகிய சுருதி கண்ணன், ஸ்வேதா சுரேந்திரன் மற்றும் யவிஷா தயாகரன் நடனத்தினை வழங்கினார்கள். இன்றய நிகழ்வின் பிரதான விடயாமான பேசுவோம் போரிடுவோம் நூலின் வெளியீட்டு நிகழ்வுகளை கவிஞர் கந்தையா இராஜமனோகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

04 1 பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடுஇலக்கியவாதி மற்றும் எழுத்தாளர் திருமதி மாதவி சிவசீலன் மற்றும் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர் திரு. அருஸ் அவர்கள் பேசுவோம் போரிடுவோம் நூல் சார்ந்த உரையினை வழங்கினார்கள். அனைத்துலகத் தொடர்பக நிர்வாக பொறுப்பாளர் திரு தினேஷ் அவர்கள் விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க. வே. பாலகுமாரன் அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த நினைவுப்பகிர்வினை வழங்கினார்கள். தொடர்ந்து க.வே.பாலகுமாரன் அவர்கள் பற்றிய சிறு காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. நூலின் பிரதிகளை கா.வே பாலகுமாரன் அவர்களின் மகள் மகிழினி வழங்கிவைத்தார்.

05 2 பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடுபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலைபண்பாட்டுக் கழகம் சார்பாக திருமதி உமாகாந்தி அவர்கள் நன்றியுரையினை வழங்கினார்கள். இவர் தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவை முன்னாள் இயக்குனரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் கல்வியையும், ஆசிரியர் பணியையும் முன்னெடுத்த மூத்த ஆசிரியரும் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் தமிழ் தேர்வுக்கான ஆய்வாளருமாவார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேந்தப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறை பொறுப்பாளர் திரு. நியூட்டன் அவர்கள் உறுதிமொழியுடன் நிகழ்வானது நிறைவடைந்தது.

நன்றி: ஈழம்ரஞ்சன்