போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே – இறுதிப்பகுதி

சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள்போரால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்காக உரத்துக் குரல் கொடுப்பதில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் மிகக் காத்திரமான பங்கு வகிக்கின்றன. உளவளத்துணை உதவிகள், அவசரகால உதவி, பாதுகாப்பு உதவிகள் போன்ற இன்னோரன்ன பணிகளை இந்தச் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் உலகெங்கும் ஆற்றிவருகின்றன. இவற்றுக்கு மேலாக, சிறுவர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், அரசுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் சிறுவர் உரிமைகளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய வகையில் அவற்றின் மேல் அழுத்தத்தைப் பிரயோகித்தல் மற்றும் அவ்வாறான அமைப்புகளின் கொள்கை உருவாக்கம் திட்டச்செயற்பாடுகளில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய விதத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் இவ்வாறான சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபடுகின்றன.gaza kids போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே - இறுதிப்பகுதிஉட்கட்டமைப்புகள் சிதைக்கப்படுதல், வன்முறைகள் முடிவற்றுத் தொடர்தல் போன்ற காரணங்களால், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு போதிய உதவியை வழங்குவதில் மனிதாய நிறுவனங்கள் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றன. இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக, போதிய மருத்துவ உதவிகள் சிறுவருக்குக் கிடைக்காமல் போவதன் காரணத்தினால், நோய் மற்றும் தவிர்க்கப்படக்கூடிய சாவுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. தரமான குடிநீரைப் பெறுவதிலும் ஏனைய சுகாதாரச் சேவைகளைப் பெறுவதிலும் உள்ள சிரமங்கள், நீரால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் சாத்தியப்பாட்டைத் தோற்றுவித்து, அவர்களது ஆரோக்கியத்தையும் நலனையும் மேலும் கேள்விக்குரியதாக மாற்றுகின்றன.ஐக்கிய நாடுகளின் முயற்சிகளும் அது சந்திக்கும் தோல்விகளும்தனது பல்வேறு கிளை நிறுவனங்கள், பொறிமுறைகள் ஊடாக, போரால் பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற சிறுவர்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுத்துவருகிறது. 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் சாசனம், சிறுவர்களின் உரிமைகளை வரையறை செய்வதுடன், எல்லாச்சூழல்களிலும் அவ்வாறான உரிமைகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. சிறுவர் பாதுகாப்பு ஆணைகள் பலவற்றைத் தாபிப்பதுடன், அமைதியைப் பேணும் செயற்பாடுகளில் இந்தச் சாசனத்தை உள்வாங்குவதன் ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும் சிறுவர் பாதுகாப்பு விடயங்களைக் கையில் எடுத்து வருகின்றது.இவை எவ்வாறிருப்பினும், ஐக்கிய நாடுகளின் முயற்சிகள் எல்லாநேரங்களிலும் வெற்றியைத் தரும் என்று சொல்லமுடியாது. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டிருக்கும் நாடுகளின் வீட்டோ அதிகாரம், ஐக்கிய நாடுகள் தனது பணியைச் செவ்வனே செய்வதற்குத் தடையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சிரியப் போரை எடுத்துக்கொண்டால், ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைத் தொடர்ந்து பிரயோகிப்பதன் காரணத்தால். சிறுவர்களுக்கு எதிராகப் பாரிய குற்றங்களை இழைத்தவர்களைத் தண்டிப்பது இயலாமல் இருக்கிறது. இக்காரணத்தால் அங்கு சிறுவர்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.போர்ச்சூழலில் அகப்பட்டுள்ள சிறுவரைப் பாதுகாப்பதில் பன்னாட்டுச் சமூகத்துக்குரிய கடப்பாடுபோர் நடைபெறும் பிரதேசங்களில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பது, பன்னாட்டுச் சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளாதிருத்தல், சிறுவரை இலக்கு வைக்காதிருத்தல் போன்ற பன்னாட்டு மனிதாயச் சட்டங்களை, போரில் ஈடுபடுவோர் மதித்து நடக்கவேண்டும். சிறுவர் தொடர்பான பன்னாட்டுச் சாசனங்களை நாடுகள் அங்கீகரிப்பதுடன், சிறுவர் உரிமைச் சாசனம் மற்றும் அதனுடன் இணைந்த விதிமுறைகள் போன்றவற்றை தமது நாட்டுச்சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்குள் உள்வாங்க வேண்டும்.israel palestine gaza children names face killed aug 2022 mee e1660457464781 போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே - இறுதிப்பகுதிபன்னாட்டு அமைப்புகளின் உதவிகளைப் பெற்று, தேசிய அரசுகள், போரால் பாதிக்கப்படும் பிரதேசங்களில், சிறுவர்களைப் பாதுகாக்கும் பொறிமுறைகளைக் கட்டமைக்க வேண்டும். சிறுவருக்கு ஏற்றவிதத்தில் வடிவமைக்கப்பட்ட முறையீட்டு வழிவகைகள், சிறுவருக்கான பாதுகாப்பிடங்கள், சிறுவருக்கு உளவள உதவி வழங்குவதற்குப் பயிற்றப்பட்டவர்கள் போன்ற வசதிகளை இவ்வாறான பொறிமுறைகள் உள்ளடக்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகள், தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடரக்கூடிய வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு, கற்றல் செயற்பாடுகளுக்கான தற்காலிக இடவசதிகள் இவ்வாறான சிறுவருக்குச் செய்துகொடுக்கப்பட வேண்டும். மனிதாய அமைப்புகள், சிறுவருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை தங்குதடையின்றி வழங்கக்கூடிய வகையில் போரில் ஈடுபடும் தரப்புகள் வழிவகை செய்துகொடுக்க வேண்டும்.சிறுவர் போராளிகளது ஆயுதங்கள் களையப்பட்டு, அவர்கள் இயல்பு வாழ்க்கை வாழும் வழிவகைகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். அவ்வாறான சிறுவருக்கான உளவள உதவிகள், கல்வி, தொழிற்பயிற்சிகள், மற்றும் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குத் தேவையான வசதிகள் என்பன வழங்கப்பட வேண்டும். போரில் சிறுவருக்கு எதிராக பாரிய குற்றங்களை இழைத்தவர்கள், பன்னாட்டு நீதியியல் நீதிமன்றம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற கட்டமைப்புகள் ஊடாகப் பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.மேலதிகமாக, சிறுவர்களின் பிரச்சினைகள் நெருக்கடியான நிலையை அடைவதற்கு முன்னர்,  முன்கூட்டியே இனங்காணக்கூடிய வகையில் சாதாரண மக்கள் நடுவில், தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும். போரின் உடனடி விளைவுகள், போர் ஏற்படுதவற்கான அடிப்படைக்காரணங்கள் போன்றவை இனங்காணப்பட்டு, நீண்ட கால அமைதிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள், மற்றும் சிறுவர் மீது இழைக்கப்பட்ட ஏனைய கொடுமைகளுக்கான நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு, போரைச் சந்தித்த சமூகங்களில் நல்லிணக்கமும் குணமாக்குதலும் மேற்கொள்ளப்படவேண்டும்.போர்க்காலங்களில் ஒத்துணர்வையும் அமைதியையும் பேணுதல்தொடர்ந்து நீண்ட காலம் நடைபெறும் போர்களும் சிறுவர்களில் அவ்வாறான போர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களும் கடுஞ்சினம், பழிவாங்கும் தன்மைகள், நம்பிக்கையீனம் போன்றவற்றுக்குத் தூபம் போடுகின்றன. வன்முறை மற்றும் விரோத உணர்வுகளின் நடுவில் வளர்கின்ற சிறுவர்கள் நடுவில் ஒத்துணர்வு மற்றும் முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்த்தல் போன்ற ஆற்றல்களின் வளர்ச்சி அவர்களில் தடைப்படுகின்றன. வன்முறைகளை அனுபவிக்கும் அல்லது அவற்றை நேரில் பார்க்கும் சிறுவர்கள், தீவிரவாதிகளாகப் பின்னர் மாற்றமடைந்து, வன்முறைச் சக்கரம் எதிர்காலச் சந்ததிகள் நடுவில் தொடரக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கின்றன.போரின் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்கள் சந்தித்த உளநெருக்கீடுகளிலிருந்து அச்சிறுவர்கள் விடுபடுவதற்குத் தேவையான உதவிகளும் அவர்களது உணர்வுகளை அவர்கள் உரியமுறையில் கையாளுவதற்குத் தேவையான உதவிகளும் அவ்வாறான சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீளக் கட்டியெழுப்பப்படவேண்டும். குடிநீர், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற வசதிகள் மீளமைப்பு செய்யப்பட்டு, சிறுவர்கள் தரமான கல்வியூட்டலைப் பெற்றுக்கொள்ளவும், ஏனைய அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் உரிய வசதிகள் அவர்களுக்குச் செய்துகொடுக்கப்படவேண்டும். இவற்றுடன் அமைதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். போரின் இரு பக்கத்திலுமுள்ள சிறுவர்கள் தமக்கிடையே உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஒருவரையொருவர் புரிந்து நடக்கக்கூடிய வாய்ப்புகளும் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.

தமிழில்: ஜெயந்திரன்

நன்றிgroundviews.org