மக்கள் பெருமளவில் ஒன்று கூடுகின்ற மாற்றம் நடக்க வேண்டும் – கலாநிதி க. சிதம்பரநாதன்

இந்த மக்கள் அவர்களை சுற்றியுள்ள நிலைமையை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களது எதிர்காலம் சூனியமாகி விடும். வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கவலைப்படுகிறேன் இந்த மக்கள் எழுச்சி பெற வேண்டும்.

மக்கள் பெருமளவில் ஒன்று கூடுகின்ற மாற்றம் நடக்க வேண்டும்” இவை 1987 இல் தியாகதீபம் கூறிய வார்த்தைகள்… இவற்றை நினைவுபடுத்திய கலாநிதி க. சிதம்பரநாதன் தியாக தீபத்தின் தேசத்துக்கான அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று 20.09.2023 புதன்கிழமை மதியம் கைலாசபதி அரங்கில் “மீண்டெழும் பார்த்தீபம்” எனும் கருப்பொருளில் சிறப்புரைகள் இடம்பெற்றன. அதில் பங்கேற்று “நினைவெழுச்சி மாற்றத்திற்கான திறவுகோல்” எனும் தலைப்பில் கலைப்பீடம் – நுண்கலைத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் கலாநிதி க. சிதம்பரநாதன் சிறப்புரை ஆற்றினார்.

https://youtu.be/vMo6i5jkx94