மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

302 06 மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் Volker Türk அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என உறுதியாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயாதிக்க எல்லைக்கு பொருத்தமான நடவடிக்கைகளை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரையிலான மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.