மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

IMG 20240709 WA0028 மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார்.

பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தினார்.

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசிய பிரதமருடன் கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.

இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.