மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனை மெல்ல மெல்ல விரிவாக்கம் பெற்று வருகின்றது. லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 12 நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இஸ்ரேலின் 12 இற்கு மேற்பட்ட மேகாவா டாங்கிகள் (Merkava-4) அழிக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். காசா எல்லைகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் 20 இற்கு மேற்பட்ட டாங்கிகளை அழித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அவை அனைத்தும் ரஸ்யாவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (Kornet-E ATGM) பயன்படுத்தியே அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏவுகணைகள் ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேல் தரப்பு அதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை வெளியிடவில்லை.

palastine1 மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்எனினும் அமெரிக்காவின் குளோப்மாஸ்ரர் விமானங்கள் இஸ்ரேலுக்கு கவசவாகனங்களை தரையிறக்கி வருவதால், தாக்குதல்களில் சேதமடைந்த வாகனங்களுக்கு பதிலாக மாற்றீடு செய்யப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதேசமயம் யேமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட 3 ஏவுகணைகளை (Ballistic missiles) செங்கடல் பகுதியில் நின்ற தமது USS Carney (Destroyer) என்ற கப்பல் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அமெரிக்காவின் படைத்தரப்பு வெள்ளிக்கிழமை (20) தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு ஈராக்கில் உள்ள Ain al-Asad என்ற அமெரிக்க வான்படைதளம் மீதும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தளம் அமைந்துள்ள பகுதியில் பல வெடிப்பதிர்வுகளை கேட்டதாக அரபு நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தபோதும், பலவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், சில வீழ்ந்து வெடித்தள்ளதாகவும் அமெரிக்காவின் பென்ரகன் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் பற் றெடர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களிலும் சோவித்து தயாரிப்பான பல்குழல் உந்துகணைகளே (Grad missiles) பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மறுதினம் சிரியாவில் உள்ள Al-Tanf அமெரிக்க தளம் மீதும் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, இஸ்ரேலின் கண்காணிப்பு காணொளிகள் மற்றும் பெருமளவான காவல்நிலைகள் மீது லெபனானில் இருந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

gaza223 மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்லெபானனில் இருந்து ஹிஸ்புல்லாக்களின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் லெபனானில் இருந்து தமது மக்களை வெளியேறுமாறு அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் வான்படையினர் தொடர்ந்து காசா பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் 20 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும், ஹமாஸின் பலஸ்தீனிய தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜிகாட் முகெய்சின் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் படையினர் தரப்பில் இதுவரை 306 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 203 மக்களை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு சாதனம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைத் தாக்குதல்களை தடுக்க முடியாது தினறிவருவதா த புளூம்பேர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

எனவே இஸ்ரேல் படையினரின் மனவலிமையை உயர்வாக வைத்திருக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் காசாவின் எல்லையில் நிலைகொண்டுள்ள படை நிலைகளுக்கு பயணம் மேற்கொண்டுள்னர்.

அதேசமயம், மொறோக்கோ, துருக்கி, ஜோர்டன், எகிப்த்து, ஆர்ஜாபைஜான் மற்றும் ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள தமது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Mig 31 Russia மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இந்த நிலையில் அமெரிக்காவின் இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை எதிர்கொள்ளும் முகமாக தனது மிக்-31 விமானத்தை கருங்கடல் பகுதியில் நிரந்தர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.

மிக்-31 விமானங்கள் கைப்பசொனிக் எனப்படும் ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை வீசக்கூடியவை. இந்த ஏவுகணைகளை முதலில் உக்ரைன் சமரில் நேட்டோ பயிற்சியாளர்களுக்கு எதிராக ரஸ்யா பயன்படுத்தியிருந்தது. பின்னர் அமெரிக்காவின் பெற்றியாட் ஏவுகணைகளை அழிப்பதற்கும் பயன்படுத்தியிருந்தது.

விமானந்தாங்கி கப்பல்களை கொல்லும் திறன்மிக்க இந்த ஏவுகணை 1500 தொடக்கம் 2000 கி.மீ தூரவீச்சுக் கொண்டவை. அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்கள் நிற்கும் மெடிற்றரேனியன் கடல் பகுதிக்கும் கருங்கடல் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம் 1100 கி.மீ ஆகும்.

இதனிடையே, காசாவில் உள்ள மிகவும் பழமையான அதாவது 1904 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலுக்கு தான் பொறுப்பல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், அதனை பல நாடுகளும், ஊடகங்களும் மறுத்துள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பான செய்மதிப் புகைப்படம் ஆய்வுசெய்யப்படவேண்டும் என ரஸ்யா தெரிவித்துள்ளது. அதேசமயம், என்.பி.சி மற்றும் பி.பி.சி நிறுவனங்களின் களமுனை செய்தியாளர்கள் இஸ்ரேலின் கூற்றை மறுத்துள்ளனர். இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் குண்டு பலஸ்தீனத்திடம் இல்லை என என்.பி.சி நிறுவனம் செலுத்துள்ளது.

MK 84 bomb மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அமெரிக்க தயாரிப்பான எம்.கே-84 என்ற குண்டே எப்-16 விமானத்தில் இருந்து வீசப்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட த வோல் ஸ்ரீற் ஜேர்னல் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த குண்டு 438 கிலோ அதிஉயர் வெடிமருந்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல்களில் இதுவரையில் 471 பேர் கொல்லப்பட்டதாகவும், பல நூறுபேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அரபு நாடுகளிலும், ஏனைய பல உலக நாடுகளிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பல இடங்களில் தூதரகங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈராக்கில் உள்ள இராணுவத்தளம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈராக்கின் எதிர்ப்புக் குழு உரிமை கோரியுள்ளது.

அதேசயம், இரண்டாவது முறையாக கசாவில் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஏவுவான தீர்மானம் ஒன்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டபோதும் அதனை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தினால் முறியடித்துள்ளது. செவ்வாய்கிழமை(17) காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் 500 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ரஸ்யாவும், ஐக்கிய அரபு ஏமிரேற்சும் பாதுகாப்புச்சபையை கூடுமாறு அழைப்பு விடுத்திருந்தன.

இதனிடையே, மிகப்பெரும் போர் ஒன்றை தவிர்ப்பதற்கான இராஜதந்திர நடகர்வுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் பைடன் புதன்கிழமை (18) இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து பிரித்தானியா பிரதமர் ரிசி சுனாக் சென்றுள்ளார். அதற்கு முன்னர் ஜேர்மன் அதிபர் சென்றிருந்தார்.

அதேசமயம், சவுதி அரேபியாவின் அரசரை சுனாக் சந்தித்துள்ளதுடன், எகிப்த்தின் தலைவர் ஜேர்டான் அதிபரை எகிப்த்தின் தலைநகரில் அவசரமாக சந்தித்துள்ளார். ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் பெய்ருட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதேசமயம், ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் அவசரமாக வடகொரியாவுக்கு சென்றுள்ளார்.

57 நாடுகளை கொண்டுள்ள இஸ்லாமிய கூட்டமைப்பும் நேற்று அசவரமாக கூடியுள்ளது. அதில் பங்குபற்றிய லிபியா எல்லைகள் திறக்கப்பட்டால் பலஸ்தீனத்தை பாதுகாக்க படை அனுப்பப்போவதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான அனுமதியையும் வழங்குவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அனைத்துலக ஆதரவுகளை பெறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய அதிபரின் சீனா பயணமும், அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணமும் உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் மிகப்பெரும் பிளவுகளை காண்பிப்பதுடன், மிக விரைவாக உலக ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதையும் காண்பிக்கின்றன