முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தும் காசாவின் அவலங்கள்

காசாவில் இடம்பெறும் போர் மிகப்பெரும் மனிதப்பேரவலமாக மாற்றம் பெற்றுவருகின்றது. போரை நிறுத்த முடியாது ஐ.நா செயற்திறன் அற்று இருக்கும் அதேசமயம் அங்கு தினமும் 136 குழந்தைகள் கொல்லப்படுகின்றதை உலகம் வெடிக்கை பார்த்து நிற்கின்றது.

காசா பகுதிக்கான உணவு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாண் மற்றும் ரொட்டிகளை வாங்குவதற்குமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசாவின் மக்கள் தொகையில் 50 விகிதமானவர்கள் சிறுவர்களாக உள்ள நிலையில் அங்கு மிகப்பெரும் பட்டினி அவலம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் கஞ்சிக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் அதனை பெற்றுக்கொள்வதற்காக சிறுவர்களும் குழந்தைகளும் ஏங்குவதும் இந்த நூற்றாண்டின் அவலமாக பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலpல் இலங்கை அரசின் திட்டமிட்ட உணவுத் தடையை தொடர்ந்து கஞ்சியை அருந்தி இறுதிநேரத்தில் மக்கள் உயிர்வாழ்ந்தது போன்ற நிகழ்வை அங்கு காணக்கூடியதாக இருந்ததது.

food22 முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தும் காசாவின் அவலங்கள்அன்று பல பத்தாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நாவின் தவறே காரணம் என ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை தெரிவித்தபோதும். அதற்கு பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்பியதே 13 ஆண்டுகள் கடந்தும் அவ்வாறான அவலங்கள் தொடர்வதற்கான காரணம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 33 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குடிநீர் விநியோகம் காரணமாக சிறுவர்கள் நீருக்காக போத்தல்களுடன் அலைவதும், குடிநீர் பெற்றுவர சென்றவர்கள் குண்டுத்தாக்குதல்களில் இறப்பதும் காசாவில் வழமையாகிவிட்டதாக அங்கிருத்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் உள்ள மக்கள் இரண்டு அரபு ரொட்டிகளையே தினமும் உணவாக உட்கொள்கின்றனர். அங்கு மிஞ்சியிருக்கும் மாவில் அதனை தான் அவர்களால் உண்ணமுடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான Thomas White தெரிவித்துள்ளார்.

எனினும் இப்போது ரெட்டிகளை விட தண்ணீரே மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது எங்கும் கண்ணீர் தண்ணீர் என்ற குரல்களே ஒலிக்கின்றன. அந்த பகுதிக்கு ஒரு தண்ணீர் குழாய் மூலமே நீர் விநியோகம் நடைபெறுகின்றது. 1.7 மில்லியன் மக்களுக்கு உணவுகளை தயாரிப்பதற்கு 86 பேக்கறிகளே இயங்குகின்றன என 193 நாடுகளை கொண்ட ஐ.நா உறுப்பு நாடுககளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற காணொளி மூலமான சந்திப்பில் வைற் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இஸ்ரேலில் இடம்பெறும் ஒரு மாத போரில் உக்ரைனில் இடம்பெறும் 620 நாள் போரைவிட அதிகளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும் 26000 பேர் காயமடைந்துள்ளதுடன், 2300 பேர் காணாமல்போயுள்ளனர்.