முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது – உணா்வெழுச்சியுடன் நிகழ்வுகள்

11 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது - உணா்வெழுச்சியுடன் நிகழ்வுகள்தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம் பெயர்ந்து தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும், முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனியும் இன்று காலை யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவேந்தி பொதுச்சுடரை முன்னாள் பேராளியும் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான விஜயன் ஏற்றி வைத்தார். தொடர்ச்சியாக ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

12 1 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது - உணா்வெழுச்சியுடன் நிகழ்வுகள்இதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ். நகரிலிருந்து ஆரம்பமானது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.